திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, February 7, 2011

கண்கள் கசிந்துருகும் மருத்துவ மனை தஃவா

,


 கண்கள் கசிந்துருகும் மருத்துவ மனை தஃவா     

ஞாயிற்று கிழமைகளில் அரசு மருத்துவமனைகளில் அல்லலுற்று படுத்திருக்கும் ஏழை நோயாளிகளை சந்தித்து, நபி ஸல் அவர்களின் சுன்னத்தான வழிமுறைப்படி அவர்களுக்காக 'லா பஹ்ஷ தஹஹருன் இன்ஷா அல்லாஹ்' என அவர்களுக்காக பிரார்த்தனை செய்து, ஆறுதலாய் தலை வருடி, அல்லாஹ் என்றால் யார்? 
இஸ்லாம் என்றல் என்ன? என்பதை எடுத்து சொல்வதோடு , தாவா சம்பந்தமான கையேடுகளையும் வழங்கி , ஏழைகளுக்கு உணவளிக்க தூண்டும் இஸ்லாத்தின் மனித நேயத்தை எடுத்துரைக்கும் விதமாக பழங்கள் பிஸ்கட்டுகள் வழங்கி














 அழைப்பு பணி செய்வது ஐ.என்.டி.ஜே.வின் தாவாக்குழுவின் வழக்கமாகும்.

இந்த வாரம் சென்னை ராயப்பேட்டை அரசு  மருத்துவ மனையில் மாவட்ட பேச்சாளர் அபுதாகிர் தலைமையில்  குழுவும், மாநில செயலர் செங்கிஸ் கான் தலைமையில் ஒரு குழுவும் , சுமார் இருபது பேர்  அடங்கிய குழு சுமார் நூற்றுக்கும்  அதிகமானவர்களை சந்தித்து அழைப்பு பணி செய்தது!


விழிகளில் நீர் கசிய நம்மை பார்க்கும் நோயாளிகளிடம் நீங்களும் நாங்களும் சகோதர்கள் ஒரு தாய் வாயிற்று பிள்ளைகள் உங்களுக்காக பிரார்த்திப்பதை எங்கள் நபிகள் நாயகம் கற்று தந்துள்ளார்கள் என கூறும போது இணக்கமாய் நாம் கூறும அனைத்தையும் செவிதாழ்த்தி கேட்கின்றனர்.! மருத்துவமனை தாவாவினால் , அழைப்புப்பணி, நோயாளியை சந்தித்தல், ஏழைக்கு உணவளித்தல், மக்களிடையே இணக்கம் போன்ற நன்மைகளோடு மற்றொரு உண்மையும் விளங்குகிறது ! நோயாளிகளின் அவல நிலையை பார்க்கும் போது அல்லாஹ் நம்மை எவ்வளவு மேலாக வைத்துள்ளான் என அவன் நமக்கு வழங்கியுள்ள அருட் கொடையை நினைவு கூற தூண்டுகிறது! மேலும் இத்தனை நன்மைகளையும் ஒருசேரப் பெற்ற மன நிறைவையும் தந்தது!

0 comments to “கண்கள் கசிந்துருகும் மருத்துவ மனை தஃவா”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates