நேற்று (27.02.2011) ஞாயிறு மாலை மண்ணடியில் சமூக தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமா “வரதட்சணை” என்ற தலைப்பில் மாநில செயலாளர் செங்கிஸ்கான் “இஸ்லாமிய அரசியலும் இன்றைய அரசியலும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாநில பொருளாளர் தொண்டியப்பா “சமூக தீமைகள்” என்ற தலைப்பிலும், மாநில தலைவர் S.M.பாக்கர் "கோத்ரா ரயில் எரிப்பும் தீர்ப்பும் சதியும்" என்ற தலைப்பில் எழுச்சிமிக்க உரையினை ஆற்றினர்.
பயனுள்ள இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான ஆண்களும் அதற்கு சமமாக பெண்களும் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)
மணலி அஸ்பாக்