திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, February 26, 2011

ஸலாம் கூறுதல்

,
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காத்துஹு
மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக்கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின்அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும்சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு)உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்குஅறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்றுபதிலளித்தார்கள்.12236. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்     ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழையமுடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம்கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தைஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்குமத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்!உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள்(எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன்நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்குஅல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள்புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள்ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்.அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகதண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்குஇலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில்அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரிرِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்குநன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்குநன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

0 comments to “ஸலாம் கூறுதல்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates