திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, February 26, 2011

தொழுகையும், தஃவா சிந்தனையும்

,

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

حَافِظُواْ عَلَى الصَّلَوَاتِ والصَّلاَةِ الْوُسْطَى وَقُومُواْ لِلّهِ قَانِتِينَ {238

தொழுகைகளையும்நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்!அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! 2: 238.
 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
கடந்த கட்டுரைகளில் பசுமரத்தாணி போன்றுப் பதியக்கூடியப் பிஞ்சுப்பருவத்தில் தொழுகையைப் புகுத்தி விடவேண்டும் தாமதித்தால்தீமைகள் புகுந்து விடலாம், தீமைகள் புகுந்து விட்டால் அதைஅப்புறப்;படுத்தி விட்டுத் தொழுகையைப் புகுத்துவதுகடினமாகிவிடும் என்பதையும், தொழுகையைப் புகுத்தியதும் அதுஉள்ளத்தில் பதிவதற்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டும் என்பதையும் பார்த்தோம்.
அதற்கடுத்ததாக பிள்ளைகள் தொழ ஆரம்பித்ததும் விட்டு விடாமல்அவர்களுக்கு தஃவாவுடனானத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதை இப்பொழுதுப் பார்ப்போம். தொழுகையில்இறையச்சத்துடன் நில்லுங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில்கூறுகிறான். தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! 2: 238.  அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில்தொழுகையை அமைத்துக் கொண்டால் மட்டுமே இறையச்சத்துடன்தொழுகையில் நிற்க முடியும், அதன் மூலம் மறுமையில் வெற்றிப்பெற முடியம் என்பதை அறிந்திருந்த வாயில் பின் ஹூஜைர் (ரலி)அவர்கள் தொழுகையை எவ்வாறு தொழவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதற்காக ஏமன் பிரதேசத்திலிருந்து மதீனா நகர் வரைமிகப்பெரிய சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வந்து அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களை சந்தித்து தொழுகை செய்முறைவிளக்கமறிந்து சென்ற வரலாற்றைப் படித்திருக்கின்றோம்.
அந்த நபித் தோழர் வாயிலாகவே என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்றநபிமொழியையும், அத்தஹயாத்தில் விரலசைக்கும்நபிமொழியையும் கூறக் கேட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில்மதீனாவிற்கு வெளியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள்நாலாப் புறங்களிலிருந்தும் பல நூரு மைல் தூரம் நடையாய் நடந்தும்மதீனா நகர் சென்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னிலையில் அமர்ந்து சீரிய தஃவாவை உள்ளத்தில்புகுத்திக்கொண்டு அதனடிப்படையில் தொழுகை, மற்றும் இன்னப்பிறஅமல்களை அமைத்துக்கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்தவரலாற்றைப் படித்திருக்கின்றோம்.
அவர்களுக்கு அடுத்த காலத்திலும் இது தொடர்ந்தது இறையச்சமுடையவர்கள் ஆட்சியில் இருந்த காலம் வரை இதேநிலை நீடித்தது. இன்றைய நிலை அவ்வாறில்லை இஸ்லாத்தைநோக்கி அழைக்கும் பணி ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவையும்தட்டும் அளவுக்கு இலகுவாகி விட்டது.
இரவு,பகல் செல்லும் இடங்களுக்கெல்லாம், கீழ்தட்டு–மேல்தட்டுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் இந்த இஸ்லாம்சென்றடையும் என்;று இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள்முன்னறிவிப்பு செய்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கீழ்காணுமாறு கூறினார்கள் : இரவு, பகல்சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம்சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன்விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ்நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான்.இழிவானவன் இழிவடைவான்... தமீம் அத்தாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: முஸ்னத் அஹ்மத் பாகம் 4 : பக்கம் 103
இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்ததைப் போலவே இன்று உலகில் அதிகமானப் பகுதிகளுக்குஇஸ்லாம் சென்று விட்டது, இன்ஷா அல்லாஹ் மீதமுள்ளப்பகுதிகளுக்கும் இனி வரும் காலங்களில் சென்று விடும் இவ்வாறுஇஸ்லாம் செல்வதற்கு காரணமாக அமைந்தது தஃவா.கூரை வழியாக வரும் ஷைத்தான்.இன்று தஃவா அவரவர் வீட்டுக் கதவைத் தட்டினாலும் கதவைத்திறந்து வரவேற்று நெஞ்சாரத் தழுவ  மறுத்து கூரை வழியாக (கேபிள் மூலம்) வீட்டிற்குள் வரும் ஷைத்தானை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு அவன் உள்ளத்தில் புகுந்து தன் இஷ்டத்திற்கு வழி கெடுக்கவழி விடுகிறோம். இதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் அமல் என்பதால்தொலைகாட்சி முன்பு அமர்ந்து கேளிக்கைகளை கண்டு களித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டு எழுந்துசென்று குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்றமுடியாமல் போவதால் தொழுகையை தொடர முடியாத துர்பாக்கியநிலை சினிமா, சீரியல்களில் அமர்வதால் ஏற்படுகிறது.தொலைகாட்சியில் தஃவா நிகழ்ச்சிகள் அல்லது நாட்டு நடப்புகள்போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாங்குசொன்னால் பதிலளிக்க எண்ணம் ஏற்படும் இக்காமத்திற்கு முன்தொழுகைக்குச் செல்ல எண்ணம் ஏறபடும். ஆனால் சிமிமா, சீரியல்பார்க்கும்போது பாங்குக்குக் கூட பதிலளிக்க எண்ணம்ஏற்படுவதில்லை, இக்காமத்திற்கு முன் பள்ளி செல்வது என்பது கேள்விக் குறியான விஷயமாகிறது.நமக்கே இந்த நிலை என்றால் பசுமரத்தானிப் போன்றுப் பதியும் சிறுப்பிராயத்துக் குழந்தைகளை நம்முடன் சேர்த்து அமர வைத்துக்கொண்டு சினிமா, சீரியல் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அவர்கள்எவ்வாறு தொழுகையை முறைப்படி அமைத்துக் கொள்ள முடியும் ?   அதனால் குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் நடைபெறும் பயான்நிகழ்ச்சிகளை பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்க வேண்டும். இப்போதுமார்க்க நிகழ்ச்சி என்றப் பெயரால் கோயிலில் காணிக்கைத் தட்டுடன்பெயர் கூறி நடத்தப்படும் பூஜையை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ச்சிகள்நடைப் பெறுவதால் இதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதற்கடுத்ததாக குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் பயான்கள்நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,  தவறினால்தொழுவார் தொழுவார் தொழுது கொண்டே இருப்பார் தொழுகைஉள்ளத்தில் நுழையாது, இயைச்சத்தையும் ஏற்படுத்தாது.அல்லாஹ்வுக்காகவென்று உள்ளத் தொழுகை பிறருக்குகாட்டுவதற்காகவென்றும், உலக ஆதாயங்களுக்காகவென்றும்மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக்காட்டுவதற்காகத் தொழுகின்றனர். 107: 4, 5. 6.
லுக்மான்(அலை) அவர்கள் தங்கள் மகனிடம் அல்லாஹ்வை அவனுடைய வல்லமைக்கொப்பப் புகழ்ந்து விட்டு தொழுகையைகடைபிடிக்குமாறும், தஃவா செய்யுமாறும், தஃவா செய்யும்போதுஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்ளுமாறும் உபதேசம் கூறியதைஅல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

0 comments to “தொழுகையும், தஃவா சிந்தனையும்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates