திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, February 26, 2011

வீண் விரயம் செய்யாதீர்கள்

,
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
வீண் விரயம் செய்யாதீர்கள்
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும்,பேரீச்சை மரங்களையும், 
மாறுபட்ட உணவான தானியங்களையும், தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ளமாதுளை மற்றும் ஒரிலவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதைஅறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையைவழங்கி விடுங்கள்!வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம்செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன்  6:141.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும்அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம்ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளைதாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக்கொடுத்தான்.அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப்போதுமான அளவு உண்டுப் புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றிசெலுத்துகின்றன.மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள்வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்குநன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை பொருளீட்டமுடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன்எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாதுஎன்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வீண் விரையம்செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன்  6:141.தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும்.மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும்,இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்குசுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லைஇல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச்செய்வது ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச்செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான்நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். திருக்குர்ஆன் 4:36உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவைநிர்ணயித்தக் கொண்டு  போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக்கொள்வாரோ  அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்தஅடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்கமாட்டான். ...உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத்தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்றுகூறினான். திருக்குர்ஆன் 15:40இன்றுப் பார்க்கின்றோம்.
எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பலவகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்குமீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதைகுப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறுவேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல்கொட்டுவது என்பது வேறு.இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின்வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது.  சமைக்கும் பொழுதேபக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் ( முஸ்லீமாக இருந்தாலும்,முஸ்லீமல்லாதோராக இருந்தாலும் ) சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம். அபூதர்ரே ! நீர்குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக !என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் :முஸ்லிம்.அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடுஅறுக்கப்பட்ட பொழுது இதிலிருநது பக்கத்து வீட்டு யூதகுடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டைவீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்குஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னுஅம்ரு (ரலி) அவர்கள்  அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதாரநூல்: திர்மிதீ உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதிசமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காகஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப்போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய்விடுகிறது.விருந்துகளிலும் இதே நிலை.
ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானிஉணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம்தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்துகொள்வார்கள். அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில்முன்னேற்றம் அடைந்து முட்டை  சேர்க்கப்பட்டது,இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன்ஃப்ரை, அல்லது சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரைஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால்வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும்,இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர்அவைகளும்

0 comments to “வீண் விரயம் செய்யாதீர்கள்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates