திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, February 7, 2011

மன்னிக்கப்படாத பாவம்.

,

இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்துவரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள்! “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்! என்ற பொருள் கொண்ட பாடல்களைப் படிக்கிறார்கள்! 
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டப்பட்டு கூறப்பட்டுள்ள “என்னை ஆயிரம் தடவை இருட்டறையிலிருந்து அழைக்கக் கூடியவனுக்கு ஹாலிராகி உதவுகிறேன்” என்ற பொருள் கொண்ட “யாகுத்பா” என்ற கவிதையைப் பாடுகின்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களை இருட்டறையிலிருந்து ஆயிரம் தடவை அழைக்கிறாாகள்! இவ்வாறு அழைக்கும் போது அவர் விஜயம் செய்து, இவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நம்புகிறார்கள்! குழந்தை பெறும்போதும், கஸ்ட நேரத்திலும் “யாமுஹ்யித்தீனே! என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று கூறுகிறார்கள். எனக்கு நோய் குணமானால் இந்த வலியுல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிடுவேன்” என்று வேண்டுகிறார்கள். சில நேரங்களில் அதனை செய்தும் விடுகிறார்கள்.
இவைகள் எல்லாம் ஷிர்கான செயல்களாகும். இதுபோன்ற நம்பிக்கை உடையவர்களே நிச்சயமாக இணை ைவப்பவர்களாவார்கள். இந்தத் தவறான நம்பிக்கை கொண்டவர்களின் அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பயனற்றதாக ஆக்கிவிடுகிறான். இவர்கள் இந்தத் தவறான நம்பிக்ைகயிலிருந்து விலகி, உலகில் வாழும்போதே தவ்பா செய்யவில்லையானால், மறுமையில் அவர்களுக்கு மன்னிப்பே இல்லை. நிரந்தர நரகத்தையே அடைவார்கள்.
இணைவைத்தலின் தீய விளைவுகள்
அவர்களின் நல்ல அமல்கள் பயனற்றதாகிவிடும் என்று நாமாகக் கூறவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றான்.
“பின்னர் அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழிந்து விடும்! (அல்குர்ஆன் 6 : 88)
மூமினாக, ஏக இறை நம்பிக்கை உடையவனாக, ஷிர்கானன எந்த செயலும் செய்யாமல் உலகில் வாழ்ந்தவன் – வேறு ஏதேனும் குற்றங்கள் புரிந்து, அதற்கு உலகிலேயே பாவ மன்னிப்புத் தேடாமல் மரணித்து விட்டால், அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம். தண்டிக்கவும் செய்யலாம். அப்படியே அல்லாஹ் அவனைத் தண்டிக்கும்போது நரகத்தில் நிரந்தரமாக அவனை வைப்பதில்லை.
“அல்லாஹ் தனக்கு (எதனையும்) இணையாக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். (இணைவைத்தல் அல்லாத) மற்றவைகளை, தான் நாடியவர்களுக்கு மன்னிக்கின்றான். (அல்குர்ஆன் 4 : 116)
ஏக தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்காதவர்கள், மற்ற தவறுகள் புரிந்திருப்பின் இறுதிக் கட்டத்திலாவது சுவர்க்கத்தில் நுழைவார்கள். ஆனால் ஷிர்கான நம்பிக்கை உள்ளவர்கள் சுவர்க்கத்தின் வாடையைக் கூட பெற முடியாது. அல்லாஹ் சுவர்க்கத்தை அவாகள் மீது ஹராமாக்கி விட்டான்.
அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ, அவரைத் தண்டிக்காமலிருப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
சிறிது சிந்தித்துப் பாருங்கள்! ஷிர்கான காரியங்கள் புரிவோரின் முடிவு எவ்வளவு பயங்கரமானது என்று எண்ணிப் பாருங்கள். இறைவன் ஷிர்கை எவ்வளவு வெறுக்கிறான் என்பதையும் உணர்ந்து பாருங்கள். “நாம் ஷிர்கான காரியங்களைச் செய்யாமலிருப்பதில் எவ்வளவு எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்” என்பதை நீங்களே முடிவு செய்து ெகாள்ளுங்கள்.
பொருளற்ற வாதம்
ஷிர்கான செயல்களைச் செய்து வருவோரிடம் “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானதாயிற்றே?” என்று நாம் கேட்கும் போது, “நாங்கள் அழைத்துவரும் அவ்லியாக்களை தெய்வமாகவா நாங்கள் கருதுகிறோம்? அவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறும், அல்லாஹ்விடம் பெற்றுத் தருமாறும் தானே வேண்டுகிறோம்! இது எப்படி ஷிர்காகும்?” என்று கேட்கின்றனர். அந்தோ பரிதாபம்! இவர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ்வை கொடுங்கோல் மன்னனுக்கன்றோ ஒப்பிட்டு விட்டார்கள்! அல்லாஹ் மிக நேர்மையானவன், அவன் அடியார்கள் மீது மிகவும் இரக்கம் கொண்டவன். தன் அடியார்கள் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் செவி மடுக்கிறான். அத்தனையையும் ஒரே நேரத்தில் நிவர்த்திக்கவும் செய்கிறான். இன்னொருவர் மூலம் அடியார்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை, இன்னொருவர் சொல்லிக் கொடுத்துத் தெரிந்து கொள்ள அவன் அறியாதவனுமில்லை. அந்த இன்னொருவர் அவனை விட இரக்கம் கொண்டவருமில்லை
ஒர தமிழ் எழுத்தாளர் தன் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்:-
அவ்லியாக்களை அல்லாஹ்விடம் நமக்காக பரிந்து பேசுகின்ற வக்கீல்களாக கருதிக் கொண்டு, நாம் எவ்வளவு பெரிய அறிவிலிகள் என்பதையல்லவா வெளிப் படுத்துகின்ேறாம்! அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மையிருட்டில் நடமாடும் கறுப்பு எறும்பின் காலடி ஓசைகளையும் நன்கு அறிந்தவன். எல்லோருடைய உள்ளக் கிளர்ச்சிகளையும் உணர்பவன். அத்தகைய ஆற்றலுள்ளவனை ஒரு சாதாரண நீதிபதியுடன் ஒப்பிட்டு பேச முடியுமா? உலகிலுள்ள நீதிபதிக்கு ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கையை உணரும் சக்தி இல்லை. அதற்காக வக்கீல்கள் தேவைப்படுவது இயற்கை. அந்த வக்கீல்கள், தமது கட்சிக்காரனின் வாதங்களை பக்குவமாக நிதிபதியிடம் எடுத்துக் கூறுவாாகள். உலக நீதிபதிகள், வக்கீல்கள் சாதுர்யப் பேச்சினால் பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் நம்பி தீர்ப்புக் கூற சந்தர்ப்பமுண்டு. இதுபோல நாம் நினைக்கிறபடி இந்த அவ்லியா வக்கீல்கள் அல்லாஹ்விடம் வாதாடி, நமது அயோக்கிய தனங்களையெல்லாம், அப்பழுக்கற்றவை என்று அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டி நமது கட்சியை ஜெயிக்கச் செய்து விடுவார்களா? எந்தக் கணிப்பிலே நாம் அவ்லியாக்களை நமது வக்கீல்களாக மாற்றி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யத் துணிகிறோம்? (மீதி அடுத்த அதழில் முடியும்)

0 comments to “மன்னிக்கப்படாத பாவம்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates