திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, March 7, 2011

ஜோசியம்முலம் கட்டிலை விட்டு இறங்கவிடாமல் பெண்ணுக்கு 75 நாள் சிறை

,

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கோவை: தங்க நகைகளையும் லட்சக்கணக்கில் பணத்தையும் மோசடி செய்த போலி ஜோசியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ரத்தம் கக்கி செத்துவிடுவீர்கள் என்று மிரட்டி ஒரு பெண்ணை கட்டிலிலேயே 2 மாதத்துக்கு மேல் சிறை வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(62). மனைவி ரேணுகாதேவி(50). இருவரும் பிஎஸ்என்எல் அலுவலர்கள். முத்துகிருஷ்ணன் ஓய்வு பெற்றுவிட்டார். பொள்ளாச்சி ஜோதிநகரில் வசிக்கின்றனர்.

சிறுமுகை இடுகம்பாளையத்தை சேர்ந்த ஜோசியர் முருகேசன் (35) என்பவர் ரேணுகாதேவியிடம், ‘உங்கள் கிரக அமைப்பு சரியில்லை. குடும்பத்தில் மரணம் நிகழும் வாய்ப்பு உள்ளது. பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். சிறுமுகையில் வசிக்கும் நாச்சிமுத்து மனைவி கீதா (40) பரிகார பூஜை செய்வதில் வல்லவர் என்றும் கூறியுள்ளார். ஜோதிடர், பரிகார ஸ்பெஷலிஸ்ட் கீதா, அவரது கணவர் நாச்சிமுத்து ஆகியோர் சேர்ந்து கிரகம், மரணம், பரிகாரம் என்று கூறி கடந்த 5 ஆண்டுகளில் முத்துகிருஷ்ணன் தம்பதியிடம் இருந்து 147 பவுன் நகை, ரூ.92 லட்சத்தை பறித்தனர்.

புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் இருந்தும், அடகு கடைகளில் இருந்தும் 112 பவுன் நகை, ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது. 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது 420 (மோசடி), 390 (மிரட்டி பணம் பறித்தல்), 120பி (சதி) உள்பட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசில் போலி ஜோசியர் முருகேசன் அளித்த வாக்குமூலம்:

5&ம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஜோசியம் பற்றி எதுவும் தெரியாது. சும்மா குறி சொன்னேன். சில பேருக்கு நான் சொன்னது நடந்ததால் நம்ப ஆரம்பித்தார்கள். ஒருமுறை பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ரேணுகா தேவி வந்தார். அவரிடம் இருந்து தொடர்ந்து பணம் பறித்தோம். ரேணுகா புகார் கொடுத்துவிடுவார் என்று பயந்தோம். அவரை வீட்டை விட்டு வெளியே வராதபடி செய்ய தீர்மானித்தோம். ‘75 நாள் கிரகநிலை மிக மோசமாக உள்ளது.
தரையில் கால் பட்டால் ரத்தம் கக்கி செத்துவிடுவீர்கள்’ என்றோம். குழப்பத்தில் இருந்த அவர் பயந்துவிட்டார். 75 நாட்களுக்கு கட்டிலை விட்டே இறங்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் ரேணுகா பணம் இல்லை என்றார். வீட்டை விற்க சொன்னேன். வீடு வேண்டுமா, உயிர் வேண்டுமா என முடிவு செய்து கொள்ளுங்கள் என எச்சரித்தேன். தற்போது பிடிபட்டுள்ளேன். இவ்வாறு போலி ஜோசியர் முருகேசன் கூறியுள்ளார். 
:செய்தி தினகரன்  
                  ::::இஸ்லாமிய செய்தி:::: 

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
  حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ  ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
5:3.  (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்

2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள். 
5764. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஆவடியார்

0 comments to “ஜோசியம்முலம் கட்டிலை விட்டு இறங்கவிடாமல் பெண்ணுக்கு 75 நாள் சிறை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates