திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, March 5, 2011

பாபர் மசூதி இடிப்பு வழக்கு:அத்வானி- தாக்ரேவுக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் ‌நோட்டீஸ் அனுப்பியது

,
புதுடில்லி: அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்ரே உள்பட பா.ஜ., நிர்வாகிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
உ. பி., மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இதில் கரசேவகர்களை பா.ஜ., தலைவர்கள் தூண்டி விட்டு இடிக்க சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ. விசாரித்து வந்தது.

பா.ஜ. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பட்டது. ரேபரேலியில் உள்ள கோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து அலகாபாத் ஐகோர்ட்டில் சி.பி.ஐ. அப்பீல் மனு தாக்கல் செய்தது. ஐகோர்ட்டிலும் சி.பி.ஐ.யின் மனு தள்ளுபடியானது. இதனையடுத்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு விளக்கம் கேட்டு பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி ,முரளி ம‌னோகர் ஜோஷி, கல்யாண்சிங் மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே, உள்பட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

0 comments to “பாபர் மசூதி இடிப்பு வழக்கு:அத்வானி- தாக்ரேவுக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் ‌நோட்டீஸ் அனுப்பியது”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates