திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, March 4, 2011

பெருகிவரும் கள்ளக்காதல்களும் அருகிவரும் கற்புநெறியும்

,
அன்பர்களே,


இப்போதெல்லாம் செய்தித்தாள்களை புரட்டினால், கள்ளக்காதல் சம்பந்தமான செய்தி இடம்பெறாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினம்தோறும் அத்தகைய செய்திகளை பார்க்கிறோம்.காதலுக்கு கண் இல்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இந்த கள்ளக்காதலுக்கு இதயமும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.


கள்ளக்காதலனுடன் சேர்ந்துகொண்டு கட்டிய கணவனைகொன்ற மனைவி கைது.


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொன்ற தாய் கைது.


கள்ளக்காதல் விஷயம்மனைவிக்கு தெரிந்து விட்டதால் மனைவியை கொலைசெய்துவிட்டு ஸ்டவ் வெடித்து இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது.


இப்படி பல்வேறு பரிமாணங்களில் கள்ளக்காதல் சந்திசிரிக்கிறது.இந்த கள்ளக்காதல் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முழு முதல் காரணம் சினிமாவாகும்.


தம்பிமனைவியை அடைவது எப்படி, அண்ணியை கவர்வது எப்படி, அக்கா கணவரை மச்சினிமயக்குவது எப்படி, கொழுந்தனை அண்ணி எப்படி வளைத்து போடலாம், அண்ணன் மகனை அத்தை வளைப்பது எப்படி, பள்ளிக்கூட டீச்சரை எப்படி காதலிப்பது, வாத்தியாரை மாணவி எப்படி காதலிப்பது, என்று இன்னும் கள்ளக்காதலில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனை விசயத்திற்கும் சினிமா தெளிவாக பாடம் நடத்தியது.இதுபோக நம்முடைய சமூக அமைப்பு, அதாவது அண்ணன் பொண்டாட்டி அர பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தாம் பொண்டாட்டி என்று அந்த காலத்திலேயே பழமொழி சொல்லப்போக, அதை தவறாக விளங்கிய தவறானவர்கள் அன்னைக்கு அடுத்து இன்னொரு அன்னையாக மதிக்க வேண்டிய அண்ணியை வேறு பார்வை பார்க்கிறது. தன் மகளைப்போல் நினைக்க வேண்டிய மச்சினியை 'மயக்கப்'பார்வைபார்க்கிறார்கள்.


மச்சான்,கொழுந்தன்,அண்ணி,மச்சினிச்சி,என்று கேலி பேச்சும் கும்மாளமும் சிலரை சிலநேரங்களில் வழிதவற செய்கிறது.மேலும்,சோசலிசம் என்றபெயரால் கணவன் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி கண்ணியமாக வாழ்வதை விடுத்து 'நானும் சம்பாதிப்பேன்'என்று செல்லும் பெண்களில் சிலர் தம்மோடு பணியற்றும் ஊழியர்கள்,அதிகாரிகளில் தவறானவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து தானும் கேட்டு தனது குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டுவருகின்றனர்.ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களில் சிலர் அதை அடையும் நோக்கில்வசதிபடைத்த சிலரின் கள்ளக்காதல் வலையில் விழுகின்றனர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.


இதற்கான தீர்வுதான் என்ன..?


இதோ இஸ்லாம் அழகான வழியை காட்டுகிறது;


பேசுவதில் ஒழுக்கம்;


நீங்கள்[இறைவனுக்கு அஞ்சினால் ]குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோயிருக்கிறதோ அவன் சபலப்படுவான்.[அல்குரான்]


உடையில் ஒழுக்கம்;


நபியே!உமது மனைவியர்க்கும்,உமது புதல்வியர்களுக்கும்,நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளை தொங்கவிடுமாறு கூறுவீராக![அல்குரான்]


பார்வையில் ஒழுக்கம்;


நபியே!தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும், தமது கற்பை பேணிக்கொள்ளுமாறும் நம்ம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு கூறுவீராக!


தமது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும், தமது கற்புகளை பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக![அல்குரான்]


சந்திப்பில் ஒழுக்கம்;


[பெண்கள்]தமது கணவர்கள்,தமது தந்தையர்,தமாது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது சகோதரர்களின்-சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்கு சொந்தமான அடிமைகள், ஆண்களில்[மிகவயது முதிர்ந்த]நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்துகொள்ளும் பக்குவமில்லாத குழந்தைகள் தவிர, மற்றவர்களிடம் தமது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம்.[அல்குரான்]


நடையில் ஒழுக்கம்;


அவர்கள்[பெண்கள்] மறைத்திருக்கும் அலங்காரங்களை மற்றவர்கள் அறியவேண்டும் என்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.[அல்குரான்]


தனிமைகள் சந்திப்பதில் ஒழுக்கம்;


ரசூல்[ஸல்]அவர்கள் கூறினார்கள்; பெண்கள் தனித்து இருக்கும் வீடுகளுக்கு நீங்கள் செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்.என்றவுடன், ஒருவர் எங்கள் சகோதரர்கள் விஷயத்திலுமா..?எனக்கேட்க அதற்கு ரசூல்[ஸல்]அவர்கள் நீங்கள் மரணத்தை விரும்புவீர்களா..?என்றார்கள்.[அதாவது மரணம் எப்படி ஆபத்தானதோ அதுபோல்தான் சகோதரர்கள் விசயமும்]-அல்கதீஸ்.


எச்சரிக்கை;


விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள்; அது வெட்கக்கேடானதாகவும் தீய வழியாகவும் இருக்கிறது.[அல்குரான்]


தண்டனை;


விபச்சாரம் செய்யும் பெண்களையும்,விபச்சாரம் செய்யும் ஆண்களையும், அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒருகூட்டம் பார்த்துக்கொண்டிருக்கட்டும்.[அல்குரான்]


ரசூல்[ஸல்] வழங்கிய தண்டனை;


திருமணமாகாதவர்களுக்கு நூறு கசையடிகளும், திருமணமானவர்களுக்கு மரணதண்டனையும்.


மேற்கண்ட வழிமுறையை கையாண்டால் கள்ளக்காதல் உலகில் இருக்குமா..?

0 comments to “பெருகிவரும் கள்ளக்காதல்களும் அருகிவரும் கற்புநெறியும்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates