திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, March 8, 2011

இனியாவது திருந்துமா இஸ்லாமிய சமுதாயம்!!!!!

,
சரத்குமார் தலைமையில் நாடார்கள் புதிய இயக்கம்

அனைத்து நாடார் அமைப்புகள் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் ச
சென்னை, மார்ச் 7: நாடார் சமுதாய மக்களின் வாக்கு வங்கி பலத்தை நிரூபிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் தலைமையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.  சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் த. பத்மநாபன், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் சி. பெரியசாமி, நாடார் பேரவை தலைவர் ஏ. நாராயணன், சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் டி. தங்கமுத்து, தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி. ராஜகுமார் உள்பட பல்வேறு நாடார் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  தலைவர் சரத்குமார்: அனைத்து நாடார் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய அரசியல் அமைப்பை தொடங்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதிய அமைப்பின் தலைவராக சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டதால், ஏற்கெனவே சரத்குமார் தலைமையில் இயங்கி வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பெயரிலேயே வரும் தேர்தலை சந்திப்பது என்றும், தேர்தலுக்குப் பின் கட்சிக்கு சூட்ட வேண்டிய புதிய பெயர், கட்சியின் கொடி ஆகியவை குறித்து முடிவு செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  எந்தக் கட்சியுடன் கூட்டணி: இந்நிலையில், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து நாடார் அமைப்புகளின் பிரதிநிதிகள கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  அப்போது சரத்குமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: வரும் தேர்தல் குறித்து சில நாடார் அமைப்புகள் தி.மு.க.வுடன் பேசி வந்தன. அதேபோல் அ.தி.மு.க.வுடனும் வேறு சில அமைப்புகள் பேசி வந்தன.  எனினும், இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டு, அனைத்து நாடார் அமைப்புகளையும் உள்ளடக்கிய புதிய அமைப்பு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளில், நாடார் சமுதாயத்துக்கு உரிய மரியாதை அளிக்கும் விதத்தில் எங்களுக்கு தொகுதிகளை தரும் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றி பரிசீலிப்போம்.  அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவ்விரு கட்சிகளும் எங்களுக்கு திருப்தி தரும் முடிவை தெரிவிக்காவிட்டால், சுமார் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்கள் அமைப்பு தனித்துப் போட்டியிடும். அத்தகைய சூழல் ஏற்பட்டால், அடுத்த 72 மணி நேரத்துக்குள் எங்கள் அமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்பட அனைத்துப் பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.  தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி நாடார் சமுதாய மக்களுக்கு உள்ளது என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம் என்றார் சரத்குமார்.  பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் போல, தங்களுக்கு உள்ள வாக்கு வங்கி பலத்தை நிரூபிக்கவும், அதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் இந்த புதிய அமைப்பு தவிர்க்க முடியாத சக்தி என்பதை பிரதான கட்சிகளுக்கு உணர்த்தவும் இந்த ஒருங்கிணைந்த நாடார் சமுதாய அமைப்பு திட்டமிட்டுள்ளது.
                    இனியாவது திருந்துமா சமுதாயம்!!!!!  
 وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
6869. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.
இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள் 
 ஆவடியார் 

0 comments to “இனியாவது திருந்துமா இஸ்லாமிய சமுதாயம்!!!!!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates