திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, March 12, 2011

இஸ்லாத்திலுள்ள கிறிஸ்தவர்கள்!!!!

,




நபிக்கு ஒரு விழாவாம்………!?

இது என்ன ஆச்சர்யம் இஸ்லாத்திலும் கிரிஸ்தவர்களா? என்று  நீங்கள் மூக்கிலே கை வைப்பது புறிகிறது. ஆனால் அதுதான் உண்மையும் கூட!

ஏனெனில் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் உண்மையான முஸ்லீமாக வாழ திராணியற்ற சில கழிசடைகள், தானும் ஒரு முஸ்லிம் என்று அறிமுகப் படுத்துவதர்க்காக ஏதாவது விஷேச நாட்கள் கிடைக்காதா? என தேர்ந்தெடுத்து, அதிலே நபியவர்களை நேசிக்கிறோம். கண்ணியப் படுத்துகிறோம் என்று ஒரே நாளில் முழங்கி விட்டு, அதன் பின் தானுன்டு தன் பாடுன்டு என்று தன் வாழ்வை தொடர்கின்றனர்.

இவர்களைப் பார்க்கும் போது, கீழுள்ள குர்ஆனிய வசனம் இவர்களுக்கென்றே இறங்கியதைப் போன்றுள்ளது.


இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள். (14) அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். (15) 
இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர். (அல் பகரா-16)


சில தினங்களுக்கு முன், மாற்றங்கள் தேவை, “நாளை விபச்சாரத் தினம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்ததை வாசகர்கள் அறிவர். 


கிறிஸதவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய கலாச்சாரங்கள், வணக்கங்கள்-வழிபாடுகள், ஒரு சில தினங்களை மைய்யப் படுத்தி அதனோடு முடித்து விடுவர். அதில் அன்னையர் தினம், தொழிலளர் தினம், ஆசிரியர் தினம், கயவலர் (காதலர்) தினம் இப்படி....... நான் குறிப்பிடாத தினங்களுட்பட..


இது போன்றதொரு தினத்தைத்தான் நமது இஸ்லாமிய சமூகத்தில் சிலர், அந்தந்த  “தினங்களுக்கு முஸலீம்கள்“ என்ற சீஸன் முஸ்லீம் என்று காட்ட முனைகிறார்கள். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கிறிஸ்தவ கலாச்சாரத்தையையே பின் பற்றுவதானால் இவர்களுக்கு “இஸ்லாமிய கிறிஸ்தவர்கள்!! என்ற பெயர் மிகப் பொருத்தமாக அமையப் பெறுகிறது.   
ஏனெனில் இதனை நான் சுயமாகக் கூறவில்லை. இதோ உண்மைத் தூதர் கூறும் கண்ணியமான வாசகங்களைக் கவனியுங்கள்


உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்புப்பொந்துக்குள் புகுந்தாலும் கூட அதிலும் நீங்கள் புகுவீர்கள்
அறிவித்தவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.  



பிறந்தநாள் கொண்டாட்டம்  என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் அமைந்த ஓர் செயலல்ல. மாறாக யூத, கிறிஸ்தவ கலாச்சாரத்தாக்கத்தால் பிற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களில் இருந்து நெறிபிற‌ழ்ந்த ஷீஆக்கள்எனும் வழிதவறிய சாராரால் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கநூதனச் செயலாகும் இதுவே வரலாற்று உண்மை.

ஒரு முஸ்லிமின் செயற்பாடு ஒரு போதும் யூத, கிறிஸ்தவர்களின் மார்க்கக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக முடியாது. இஸ்லாம் என்பது அது ஓர் வாழ்வியல் மார்க்கம். அதற்கு நிகராக, உலகத்தில் இயற்றப்படும் சட்டங்கள், வேண்டுமானால் வருடங்களுக்கும் தசாப்தங்களுக்கும் மாறு படலாம். ஆனால் சத்திய இஸ்லாத்தின் கொள்கையோ கோட்பாடுகளோ-சட்டங்களோ, அன்று முதல் இன்று வரை எது வித மாற்றங்களையும்-திருத்தங்களையும் இத்த வரைக்கும் காணமுடியவில்லை. காணமுடியாது!! காரணம் இது மனிதனாலோ அல்லது வானவர்களாலோ இயற்றப் பட்ட மார்க்கமல்ல. இது அல்லாஹ்வால் இயற்றப்பட்ட மார்க்கம்.

நபி பிறந்த தினத்தைப் பொருத்த வரை, இஸ்லாம் அனுமதிக்காத மிக வன்மையாக தடுக்கின்ற செயலாகும். நபி ஸல் அவர்களுடன் பல வருடங்கள் வாழ்ந்த, அவருக்காக உயிரை தியாகம் செய்ய தயாரான, சொத்து சுகங்களை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்திற்காக பாடுபட்டவர்கள் செய்யாத, சொல்லாத செயல்கள் எப்படி நமது சமூகத்தின் கைகளில் கிடைத்தது?

போலி உலமாக்களின் சுய இலாபம் மட்டுமே இந்த மீலாத் விழா என்பது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்திருக்கிறார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்பும் அதனை ஏற்றுக்கொள்ளாத, மரணிக்கக்கூடாது என்று எதிர்பார்த்த அவரது தோழர் கொண்டாடாத விழாக்கள் ஏன் இன்று கொண்டாடப்பட வேண்டும்?

பொது மக்களே!
போலி உலமாக்களை விட்டுவிட்டு சுயமாக இஸ்லாத்தை படித்து விளங்க முன்வாருங்கள்.

இந்த உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், நம்மை ஏமாற்றவென முடிவெடுத்து ஊர் ஊராக வயிறு நிறப்பவும் மதிப்பு பெறவும் திரிகின்றார்கள்.

இஸ்லாம் சொல்லித் தந்தது அல் குர்ஆனிலும் அதன் விளக்க நூல்களான ஹதீஸ் புத்தகங்களிலும் முழுமையாக கிடைக்கின்றன. வாருங்கள் அதனைப் படித்து உண்மையை தெரிந்து அதனை நடைமுறைப்படுத்துவோம்.

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியதுமில்லை அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும்.


மார்க்கத்தில் புதிதாக புகுந்தவை அனைத்தும் பித் அத் (நூதன செயல்) ஆகும். பித்அத்கள் எல்லாம் வழிகேடுகளாகும். வழிகேடுகள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்லும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துள்ளாஹ்
ஆதாரம் : முஸ்லிம், நஸாஈ

நன்றி
 'மாற்றங்கள் தேவை'

0 comments to “இஸ்லாத்திலுள்ள கிறிஸ்தவர்கள்!!!!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates