திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, March 12, 2011

பள்ளிகட்டுவது மட்டும்தான் ஸதகதுல் ஜாரியாவா?

,



பள்ளிகட்டுவது மட்டும்தான் ஸதகதுல் ஜாரியாவா (Building masjidh is the only Permanent incoming source (Sathakathul jaariyaa)?
வெற்றியின் பக்கம் வாருங்கள்என்று ஒரு நாளைக்கு பத்து தடவை அழைக்கின்ற ஒரு இடம் அது முஸ்லிம்களுடைய வணக்கஸ்தலங்களாகிய பள்ளிவாயல்கள் மட்டுமே.
திருமண வீடுகளுக்குப் போகும் போது ஆடைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பள்ளிக்குப் போகும் போது கொடுக்க மறந்தது ஏனோ தெரியவில்லை.
தொழுகைக்கு மட்டும் பள்ளிகளை பயன்படுத்தும் காலம் இது.
முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் காலம் இது.
அதனால் நிறைய ஆராயப் பட வேண்டிய ஒரு விடயம் தான் பள்ளிகளும் அதன் பயன்பாடுகளும், ஆனால் அதற்கு வேறு தலைப்பை தேர்ந்தெடுப்போம்.
ஸதகதுல் ஜாரியா என்ற நிலையான தர்மத்தை பள்ளிகளை கட்டுவதுடன் மட்டும் நிருத்திக்கொள்ளாமல் அந்த நிதியை சமூகத்திற்கு தேவையான எல்லா துறைகளுக்கும் விரிவுபடுத்த தூண்டும் ஒரு முயற்சியே இந்த கட்டுரையின் நோக்கம்
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், நாளுக்கு நாள் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கெண்டே இருக்கின்றன, அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
1.    முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு,
2.    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சொல்லாகிய, ’இவ்வுலகில் ஓர் இறை இல்லத்தை நிர்மாணிப்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் ஓர் இல்லத்தை நிர்மாணிக்கின்றான்
இந்த முக்கியமான நபி மொழியை கவனத்தில் கொண்டு பணக்காரர்கள் தங்களுடைய சொத்திலிருந்து உதவுகின்றார்கள், பலர் அது நிலையான தர்மமாக மாறி நன்மை பயிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள்.
இதற்கு எந்த எதிர்ப்பும் விமர்சனங்களும் முஸ்லிம்களில் யாரும் சொல்ல முடியாததுதான்.
பள்ளிகளை நாடுவோருக்கு அல்லாஹ் வழங்கும் நன்மையை பாருங்கள்;
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.     (ஸஹீஹ் புகாரி - 1423)

அதை நபி (ஸல்) இப்படியும் சொல்லுகிறார்கள்;
'பூமியில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடங்கள் மஸ்ஜித்களாகும், அவனுக்கு மிக வெறுப்புக்குரிய இடங்கள் சந்தைகளாகும்.' என்றார்கள். (நூல் : முஸ்லிம்)

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுச் செய்தியை பரப்ப ஆரம்பமும் இருதியுமான மையமாக பள்ளிகளை எல்லா வகையிலும் பயன்படுத்தினார்கள்.

இதனை அவர்களின் மதீனா பயண வரலாறு சாட்சிபகர்கின்றது, மதீனா பயணத்தின் போது தங்கும் தடயமாக இடம் கிடைத்த கூபாவில் ஒரு பள்ளியை நிர்ணயித்தார்கள், அது முடிய மதீனாவை அடைந்ததும் முதல் கட்ட ஏற்பாடாக அங்கு ஒரு பள்ளியையும் நிருவினார்கள்.

மதீனாவை மையமாக (Based) வைத்து நீண்ட இஸ்லாமிய உலகையும் அந்த பள்ளியிலேயே நிர்வகித்து வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களை சந்திப்பதற்காக நஜ்ரானைச் சேர்ந்த கிறிஸ்துவ தூதுக்குழுவை (Christian deligation) மதீன பள்ளியில் வைத்து சந்தித்ததுடன் தொழும் நேரத்தில் அவர்களுக்கு அங்கேயே தனி இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருந்தார்கள்.

இன்னும் ஒரு முன்மாதிரியை இன்றைய அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் உயிர் ஊட்டுகின்றது, உலக பலகலைக்கழக வரலாற்றில் முதல் கழகமாக விளங்கும் இது (University of Azhar is the first university in the world) ஒரு பள்ளியாகவே ஆரம்பமானது. அது இன்று பல்கலைக்கழகமாக மாறி இருக்கின்றது.
வருமை ஒழிப்புக்கு உலக நாடுகளில் வணிகவியல் துறைகளின் பட்டம் பெற்ற வித்தவான்கள் விடிய விடிய ஆலோசனை வழங்கி தீர்க்க முடியாததை பள்ளியை மையமாக வைத்தே ஸதகா, ஸகாத் நிதிகளை திரட்டுதல், வசூலித்தல் பணியை நபி ஸல் அவர்கள் மேற்கொண்டார்கள்.

இவைகள் இன்னும் தொடர்கின்றன.

பள்ளிகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும் அதன் மூலம் பெற்ற பயன்களும் வானைத் தொடக்கூடியவை.


இன்று அது தலைகீழாக மாறி வருகின்றது.


ஸதகதுல் ஜாரியா என்பது நிலையான தர்மம் (Permanent incoming source) என்பதாகும்.

ஒரு மனிதன் பிறருக்கு  உதவியைச் செய்து அந்த உதவி மூலம் தனக்கு நீண்ட நெடிய நன்மையை ஈட்டிக்கொள்ளும் ஏற்பாடே இது.
மக்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு கிணற்றின் தேவை வரும் போது அதை இனங்கண்டு அதில் ஒரு கிணற்றை நிர்மானிப்பது என்பது மிகப் பெரிய ஸதகதுல் ஜாரியாவாகும்.

இந்த ஸதகதுல் ஜாரியா என்ற நிலையான தர்மத்தினூடாக மக்களிடத்திலிருந்து கிடைக்கப் பெரும் பணத்தை  சமூகத்தின் நிலை கருதி, காலத்தின் தேவை கருதி செலவிடுவது சமூக முன்னேற்றத்தின் முக்கிய மைற்களின் ஒரு நகர்வாகும்.

ஆனால் இந்த உண்மை எந்தளவு தூரம் பின்பற்றப்படுகிறது என்பதை நம்முடைய ஊர்களில் அல்லது நாடுகளில் நடைபெறும் சமூக சேவைகளை வைத்து இடைபோட்டுக்கொள்ளலாம்.

ஆனால் ஸதகதுல் ஜாரியா என்பது அல்லது சமூக சேவை என்பது பள்ளிகளை கட்டுவது மட்டும் என்று எல்லை போட்டுக்கொண்ட சகோதர்களுக்கு சில செய்திகளை ஞாபகமூட்டுவது காலத்தின் தேவையாகவும் சமூக மாற்றங்கள் குறித்து சிந்திக்கும் நமது கடமையாகவும் இருக்கின்றது.

உலக வேகத்திற்குள்ளும் சமூக முன்னேற்றத்தின் அசைவிலும் எதிரிகளின் ஆதிக்கத்தின் பரிணமிப்புக்குள்ளும் முஸ்லீம் சமூகத்தின் வீழ்ச்சிக்குள்ளும் நின்று கொன்று சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் எங்களுக்கு.

வாருங்கள்!!
வாருங்கள்!!

ள்ளிகளை நிர்ணயிக்கும் வரை மட்டும் எங்களுடைய பணி அதற்கு பின்னர் அது உங்களுடையது என்ற நிபந்தனையை மாற்றுவோம்.

ம் தலைமையில் அல்லது வழிகாட்டுதலின் பெயரில் நிர்ணயிக்கும் பள்ளி அல் குர்ஆன் ஹதீஸின் வழியில் நிர்வகிக்கப்படுகின்றனவா? என்பதில் கவனம் செலுத்துவோம்.

தொடர்ந்தேர்ச்சியாக அல் குர்ஆன் அல் ஹதீஸ் போதிக்கும் வகுப்புக்களை ஏற்படுத்துவோம்.

தேவையானவர்கள், தேவையான சந்தேகங்களை தீர்க்கும் வகையிலான நூலகங்களை உருவாக்குவோம்.

மாற்று மதச் சகோதர்களை சந்தித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தும், இஸ்லாத்தைச் சொல்லும் இடமாகவும் பள்ளிகளை மாற்றுவோம்.

லங்கை அல்லது இந்தியா போன்ற நாடுகளின் சமூக அமைப்பை பற்றி சிந்திக்கும் போது அதற்குள் உள் நுழையும் போது முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு பாரிய பின்னடைவை கண்டுள்ளதை தெரிந்துகொள்ளலாம், முஸ்லிம் சமூகத்தின் கல்வி தேவையை ஆராந்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய ஸதகதுல் ஜாரியாவை பயன்படுத்துவோம்.

திக முஸ்லிம் பாடசாலைகளில் கட்டிட குறைபாடு, ஆசிரியர் பற்றாக்குறை, கற்பதில் பின் தங்கிய மாணவர்களுக்கு மேலதிக கற்பித்தல் முறையின்மை, நூலகங்கள் இன்மை, அல்லது இருக்கும் நூலகங்களுக்கு புத்தங்கள் இல்லை என்று அடிப்படை தேவைகள் குவிந்து காணப்படுகிறது.
இந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் நிதியாக ஸதகதுல் ஜாரியாவை பயன்படுத்த முன்வருவோம்.

மது நாட்டின் நமது சமூகத்தின் கல்வித்தேவை குறித்து ஆய்வு செய்யவும் அதற்குத் தேவையான தகவல்களையும் வழங்கும் வகையிலான ஒரு குழுவை நிருவி அவர்களுக்கு ஸதகதுல் ஜாரியா நிதியிலிருந்து சம்பளம் வழங்குவோம்.

ய்வு கூடங்களை நிருவுவோம், அங்கு எல்லாத் துறைசார் புத்தகங்களையும் குவிப்போம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துவோம்.

துறைசார் கற்கைகளை மேற்படிப்புக்களை தொடர தகுதியான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு புலமைப் பரிசில்களை (scholarship) வழங்க, வழிகாட்ட கல்வி அறக்கட்டலைகளை முளைக்கச் செய்வோம்.

முஸ்லிம் பெண் அறிஞர் (Muslim women scholars) சமூகத்தை உருவாக்குவோம், இது குறைந்தபட்சம் நமது பெண்கள் ஆண் வைத்தியர்கள் முன் தங்கள் மானம் இழந்து  நிற்பதை தடுக்கலாம்.

ருத்துவமனைகள் உருவாக்குவது ஸதகதுல் ஜாரியா தான் என்பதை நம் சமூகத்தில் உள்ள பணக்காரர்களுக்கு விளங்கப்படுத்தி மருத்துவமனைகளில் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நவீன வசதிகள் கொண்ட வகையில் பல ஊர்களிலும் நிர்மாணபணிகளை ஆரம்பிக்க முன்வருவோம்.

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், இஸ்லாம் என்றால் பயங்கவாதத்தை போதிக்கும் சித்தாந்தம் என்ற சித்திரத்தை உலக சமூகத்தின் மனங்களில் வரையும் மேற்கத்தே மீடியாக்களுக்கு பதிலடியாக நம் கரங்களில் பல மீடியாக்களை தாங்குவோம், நம் ஸதகதுல் ஜாரியாக்களால அவைகளைப் பயிரிடுவோம்.

மீடியாக்களின் தேவை சமூக எழுச்சியின் முக்கிய பங்காகவும் கருவியாகவும் மாறிவிட்டது, அதனை உணர்ந்து அதற்கு ஸதகதுல் ஜாரியாவை பயன்படுத்துவோம்.

பல சமூக சேவகர்கள், நிருவனங்கள் பள்ளி கட்டுவதற்கு தான் பணம் தருகிறார்கள், அதனால் அந்த நிதியை வேறு தேவைக்கு செலவிட முடியாது என்று பல சமூக சேவை அமைப்புக்கள் சொல்லிவருகின்றன.
இந்த நிலயை மாற்ற வேண்டும்.

நமக்கு, நமது பிரதேசத்திற்கு முன்வந்து உதவக்கூடியவர்களுக்கு நமது தேவையை முதலில் எடுத்துச் சொல்லும் பேசும் மனிதர்களாக நாம் மாருவோம்.

ஒரு பள்ளி கட்டுவதற்கு இவ்வளவு பணம் தேவை என்று சொல்லுவது போல், இந்த ஊரில் ஒரு நூலகமும் மாணவர்களுக்கான ஆராய்ச்சி மையமும் (Library and research centers)  நிர்ணயிப்பதற்கு இவ்வளவு தேவை, இப்படி ஒரு நூலகம் இன்மையால் இந்த பிரதேச மாணவர்களின் கல்வி அறிவு பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பன போன்ற தேவைகளை டுத்துச் சொல்லும் போக்கை கைப்பிடிப்போம்.

ஒரு சமூகத்தில் கல்வி, பொருளாதார (Education and economic) நிலை பிந்தங்கும் போது அந்த சமூகத்தை உலக வரலாற்றில் அடையாளப்படுத்த முடியாத நிலை தோன்றும்.

அப்படியென்றால் கல்வியை கொடுக்கும் போது அந்த கற்ற சமூகத்தில் பொருளாதாரம் தானாகவே வர ஆரம்பிக்கும்.

முதலில் சமூக தேவையை கண்டு பிடிக்கும் நல்ல சமூக சேவகர்களாக மாறுவோம் (Be a good social worker for identifying the social Needs), இரண்டாவதாக அந்த தேவைகளுக்கு ஏற்ப நமது ஸதகதுல் ஜாரியாவை பயன்படுத்தும் சிறந்த தனிமனிதர்களாக தலை காட்டுவோம்.

மாற்றங்கள் தேவையின் மாற்றுச் சிந்தனைகள் மாறுதலை தோற்றுவிக்கும் இன்ஷா அல்லாஹ்.
 நன்றி::changesdo

0 comments to “பள்ளிகட்டுவது மட்டும்தான் ஸதகதுல் ஜாரியாவா?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates