திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, March 4, 2011

காதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி! கவலை கொள்ளுமா சமுதாயம்!?

,
காதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி!
கவலை கொள்ளுமா சமுதாயம்!?


வீடியோ


காதலர் தினம் எனும் சமூக தீமையை எதிர்த்து களமிறங்கிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாவா குழு இந்த கலாச்சார சீரழிவின் களமான கடற்கரையில் நாம் கண்ட காட்சிகள் இந்த சமுதாயத்தின் நிலை குறித்து நம்மை கவலை கொள்ளச் செய்தது!

முதலில் முஸ்லிம் பெண்களுக்கு தாவா செய்வோம் ! பின்னர் மற்ற மக்களைப் பார்ப்போம் என பர்தா அணிந்த ஜோடிகளை அணுகி அவர்களை விசாரித்த போது அதிர்ச்சி அடைந்தோம்! 

நாம் சந்தித்த 10 ஜோடிகளில் 9 ஆண்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்று 
தெரிய வந்தது! பெண்கள் அனைவரும் 18 வயது தாண்டாத முஸ்லிம் பெண்கள்!  இவர்களைப் பெற்றவர்கள் என்ன நினைத்து இவர்களை 
பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வேலைக்கோ அனுபியிருப்பர்கள்?

முகவரியை கேட்டால் அனைவரிடம் இருந்தும் அழுகையே பதிலாய் வந்தது! அவர்களுக்கு நம் மகளிர் அணியினர் முடிந்தவரை மார்க்க 
அடிப்படையில் புத்தி சொல்லி அனுப்பி வைத்தோம்! தொடர்ந்து 
அறிவுரை வழங்க சிலரிடம் கை பேசி எண்களை வாங்கி தொடர்ந்து 
அவர்களுக்கு மார்க்கத்தை சொல்ல உள்ளோம்!

மூன்று மணி நேரம் சென்னை கடற்கரையின் நம் கண்ணில் பட்ட 
பர்தா அணிந்த சகோதரிகளின் நிலை இதுவென்றால் , பர்தா அணியாமல் எத்தனை பேரோ? சென்னையின் மற்ற இடங்களில் ?
மாநிலத்தின் மற்ற பகுதிகளில்? 

ஆர் .எஸ்.எஸ்.இந்துத்வா சக்திகளின் லவ் பிளான் என்று வந்த எஸ்.எம்.எஸ்.களில் உண்மை இருக்குமோ?  சமுதாய இயக்கங்களும் 
பெற்றோர்களும்  உடனடியாக களமிறங்கி இதை கவனிக்காவிடில் 
நம் மானம் கப்பலேறி மறுமையில் அனைவரும் குற்றவாளிகளாக 
நிற்க வேண்டியிருக்கும்! சிந்தித்து செயலில் இறங்குமா சமுதாயம் ?    

    இவண்; இப்னு ஹுசைன்    

0 comments to “காதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி! கவலை கொள்ளுமா சமுதாயம்!?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates