இந்தியாவில் இப்போது கொள்ளை கும்பல்கள் ஒருபக்கம் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடிக்கிறது என்றால் ஆன்மீகத்தை பரப்புகிறேன் சுகம் அளிக்கிறேன் என்று இன்னொரு கும்பல் ஒரு பக்கம் கொள்ளையடித்துக்கொண்டு வருகிறது. இவர்கள் கொட்டத்தை அடக்கவேண்டிய ஆட்சியாளர்களோ இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று அனைத்து போலி ஆன்மிகவாதிகளும் ஊர் ஊராக கிளைகள் வைத்து தங்கள் கொள்ளையை தொடர்ந்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வேளி நாடுகளில் இருந்து தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை பரப்பி தன் உயிரை விட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று இருக்கும் ஆன்மிகவாதிகளோ மதத்தை பரப்புகிறேன் என்று கூறி வசதியையும் செல்வாக்கையும் அடையவே ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் கிறிஸ்த்துவத்தை பரப்பவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கிய JESUS CALLS குடும்பத்தினரின் வாழ்க்கை இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர்களுடைய நிகழ்ச்சியை மொழிபெயர்த்து வெளியிடும் அளவுக்கும் வளர்ந்துவிட்டனர்.
இவர்களுடைய நூதன கொள்ளை முறைகள்:
►தீர்க்கதரிசனம் சொல்வது
►ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
►பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
►பங்காளர், உறுப்பினர் திட்டம்.
►நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
►ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது
►கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது
தீர்க்கதரிசனம் சொல்வது
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இவர்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள், அந்த கூட்டத்தை கூட்ட இவர்கள் சொல்லும் வார்த்தை "இந்த ஆண்டுக்கான தீர்க்கதரிசனம்" வழங்குகிறார் பால்தினகரன் என்பதுதான். அந்த கூட்டத்தில் கடவுள் இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொன்னார் என்று ஒவ்வொன்றாக சொல்வார்(ஆடியில காத்தடிக்கும், ஐப்பசில மழையடிக்கும்னு). கடவுளுக்கு வேற வேலை இல்லையா? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொல்வதுதான் வேலையா?. அப்படி உண்மையில் கடவுள் இவர் காதில் வந்து நடப்பதை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் பேரழிவுகளை பாற்றி சொல்ல வேண்டியது தானே, மக்களாவது உயிர்ப்பிழைப்பார்கள் அல்லவா இல்லை இவர்கள் அப்பா இறப்பதையாவது முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே?
ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
உண்மையில் மதத்தை பரப்புபவன் தனக்கு ஏதேனும் ஆபத்து, கஷ்ட்டம் வரும்போது கடவுளிடம் பிரார்த்திக்கவேண்டும் என்றுத்தான் பிரசங்கம் பண்ணுவான். ஆனால் இந்த கொள்ளை கூட்டமோ உங்களுக்கு எந்த ஒரு கஷ்ட்டமாக இருந்தாலும் எங்கலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று தொலைக்காட்ச்சிகளிலும், புத்தகங்களிலும் தங்களுடைய தொலைப்பேசி என்னை விளம்பரப்படுத்துகின்றனர். தனக்காக இன்னொருவன் பிரார்த்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா?
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை:
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறேன் என்று பள்ளி மாணவர்களை அழைத்து கட்டாய காணிக்கை பெற்று வருகின்றனர். அது என்ன கட்டாய காணிக்கை என்று கேட்க்குறிங்களா? ஆம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திருக்கு வந்திருக்கும் மாணவர்களை ஒரே நேரத்தில் எழுந்து நிற்கச்சொல்லி அவர்கள் காணிக்கை அளித்தப்பின்தான் அமரச்சொல்வார்கள் அங்கே வந்த மாணவர்கள் வேறு வழி இல்லாமல் காணிக்கை செளுத்தியப்பிந்தான் அமருவார்கள்.
பங்காளர், உறுப்பினர் திட்டம்:
இவர்கள் அலுவலகத்துக்கு யாராவது குறை என்று வந்துவிட்டால் போதும் அவர்கள் முகவரியை வாங்கிவிட்டு அவர்கள் வீட்டுக்கு MONEY ORDER அனுப்புவதற்கான படிவத்தை அனுப்பிவிடுவார்கள் காணிக்கை அனுப்பச்சொல்லி. அதுமட்டும் இல்லாமல் பணம் கொடுத்தால் தான் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்பது போல் பல திட்டங்களை காட்டி பணம் பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி இவர்கள் பணம் பிடுங்க பயன்படுத்தும் திட்ட விபரங்கள் உங்களுக்காக
►ஆசிர்வாத திட்டம்
►குடும்ப ஆசிர்வாத திட்டம்
►கட்டிட ஆசிர்வாத திட்டம்
►பிள்ளைகள் ஆசிர்வாத திட்டம்
► டிவி க்ளப்
►பிரார்த்தனை திருவிழா திட்டம்
►வணிக ஆசிர்வாத திட்டம்
இப்படி எதில் தொட்டாலும் கடவுளிடம் ஜெபம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை விட இவர்களிடம் பணம் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதுபோல் இவர்களிடம் வருபவர்களை பயமுறுத்தி பணம் பிடுங்கி வருகின்றனர்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகம் அளிப்பது
இவர்களுடைய அப்பா நோய்வாய் பட்டு இறந்தபோது இவர் மற்றவர்களுக்கு ஜெபம் செய்து சுகமளிக்கிறேன் என்று தொலைக்காட்ச்சியில் சொல்லி பிரசங்கம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?
ஆன்மிகத்தை தொழிலாக மாற்றியது
கும்பகோணம் தீவிபத்தால் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கே வந்த குழந்தையை இழந்த பெற்றோர்களின் கதறலையும் அழுகையையும் வீடியோ எடுத்து அதையும் vcd போட்டு விற்ற ஒரு பயங்கரமான கொள்ளை கும்பல் தான் இவர்கள். அங்கே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திருக்கு வந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றுதான் வந்து அழுது புலம்பினர். ஆனால் இவர்கள் அவர்கள் அழுவதையும் அவர்களுக்கு பால்தினகரன் ஆறுதல் சொல்வதையும் வீடியோ எடுத்து வியாபாரமாக்கி பணம் சம்பாத்தித்தனர். இது ஒரு உதாரணம் மட்டும்தான் இன்னும் பல மோசடிகள் உள்ளன இவர்கள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் மக்களை அழைத்து அவர்களுடைய் நிலையை கேட்பது போலவும், அவர்கள் அழும்போது ஆறுதல் கூறுவது போலவும் நடித்து அதை வீடியோவாக எடுத்து தொலைக்காட்ச்சியில் வெளியிடுகின்றனர், இதைப்பார்ப்பவர்கள் மனம் உருகி காணிக்கை அனுப்புவார்கள் என்று.
இப்படி இவர்கள் கொள்ளையையும், மோசடிகளையும் அடிக்கிக்கொண்டே போகலாம். அதைவிட இன்னொரு கொடுமை மக்களிடம் வாங்கப்படும் காணிக்கையை இவர்கள் செலவழிக்கும் விதம்தான். நீங்களே பாருங்கள்
மக்கள் பணத்தில் இருந்து கட்டப்பட்ட கல்லூரி:(சில உதாரணம் மட்டும்தான் இன்னும் நிறைய கட்டிடங்களும், வானகரம் போன்ற இடங்களும் கணக்கில் அடங்காதவை)
சென்னை பீச் ஸ்டேஷன்:
இந்த கட்டிடம் சென்னை பீச் ஸ்டேஷன் எதிரில் உள்ளது. இந்த இடத்தில் தொழில் முறையில் வணீக வளாகம் பிடிப்பதே பெரிய விஷயம் ஆனால் இவர்கள் மக்கள் பணத்தில் பெறப்பட்ட காணிக்கையை வைத்து இவ்வளவு விலை உயர்ந்த கட்டிடத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்புவதாக கூறிக்கொண்டு தொழில் நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றனர்.
மக்கள் காணிக்கை என்று இவர்களிடம் கொடுப்பது இறைப்பணிக்கு உதவும், ஏழைகளுக்கு உதவுவார்கள் என்றுத்தான் ஆனால் இவர்கள் அந்தப்பணத்தில் கல்லூரி கட்டவும், புதிதாக இடம் வாங்குவதிலுமே அதிகமாக செலவிடுகின்றனர்.
கிறிஸ்த்துவத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் கடவுளை அழிப்பது
கிறிஸ்த்துவத்தை பரப்பிகிறேன் என்று கூறிக்கொண்டு கடவுள் படத்தை எதிலும் காட்டாமல் இவர்களுடைய புகைப்படத்தைத்தான் இவர்களுடைய அலுவலகத்திலும், தொலைக்காட்ச்சியிலும், மாத இதழ் புத்தகத்திலும் வெளியிடுகின்றனர். அதேப்போல் மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரட்ச்சனை என்றால் கூட கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்று பரிந்துரைப்பது இல்லை எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள், கடிதம் எழுதுங்கள் என்றுத்தான் பரிந்துரைக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கடவுள் இல்லை நாங்கள் தான் கடவுளின் மறு அவதாரம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
JESUS CALLS நிறுவன இணையத்தளத்தின் சிலப்புகைப்படங்கள்:
இதில் ஒரு புகைப்படத்தில் கூட கிறிஸ்த்துவத்தை குறிக்கும் சிலுவையையோ அல்லது கடவுளின் படமோ இல்லை இவர்கள் முழுக்க முழுக்க இவர்களது குடும்பத்தின் படத்தையும் இவர்கள் நிறுவனத்தின் லோகோவை குறிக்கும் கையைத்தான் பயன்படுத்துகின்றனர்.
ஆன்மிகத்தை தொழிலாக மாற்றுவதில் இவர்களும் ஒருவர் மட்டுமே, இன்னும் பல கொள்ளை கும்பல்கள் உள்ளன. அவர்களை பற்றிய விபரங்களுடன் அடுத்த பதிவில்.
ஆன்மிகத்தை தொழிலாக மாற்றுவதில் இவர்களும் ஒருவர் மட்டுமே, இன்னும் பல கொள்ளை கும்பல்கள் உள்ளன. அவர்களை பற்றிய விபரங்களுடன் அடுத்த பதிவில்.
பாவமும், குற்றமும் குறையும் வரை இவர்கள் கை ஓங்கியே இருக்கும்