திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, April 11, 2011

வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்

,

வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது ன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைப் பூ
வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.
அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘
வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால்மூலநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும்’ என்று தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?
ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் லம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.
நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். “நொறுங்கத் தின்று நூறு வயதிரு” என்பது துரையார் வாக்கு.
உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்
நன்றி:உங்களுக்காக
Mohammad Sultan

0 comments to “வாழைத் தண்டு,வாழைப் பூ மருத்துவ பண்புகள்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates