திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, June 18, 2011

அண்ணன் ஜமாஅத்தின் சட்டமன்ற முற்றுகை; தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு.

,


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

தேர்தல் தோல்வியால் மண்டையில் அடிபட்ட பாம்பாக மயங்கிக் கிடந்த அண்ணன் ஜமாஅத், தனது இருப்பை காட்டிக்கொள்ளவும், 'இருப்பை' காத்துக் கொள்ளவும் கையிலெடுத்துள்ள பிரச்சினைதான் உணர்வு அலுவலகம்[?]மீட்பு; சட்டமன்ற முற்றுகை சவடால்கள். இதில் இவர்கள் பொய்யர்கள் என்பதால்தான் இவர்களின் போராட்டம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதை காணமுடிகிறது. சட்டமன்ற முற்றுகை குறித்த இவர்களின் முதல் அறிவிப்பில்,

16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.

தமுமுக,உணர்வு அலுவலகத்தை[?] ஆக்கிரமித்தது சுயமாக அல்ல. முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடுதான் இதை செய்துள்ளார்கள் என்று அறுதியிட்டு உறுதியாக சொல்லியதோடு, அதனால்தான் அதாவது ஜெயலலிதாவை கண்டிக்கும்
வகையில் தான் முற்றுகை போராட்டம் என்று சொன்ன இந்த பொய்யர் அண்ணன் ஜமாஅத், அடுத்து அந்தர்பல்டி அடிப்பதை பாருங்கள்.

மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்கு தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் 09 .6 .2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகை போரடடத்தை ததஜ அறிவித்தது என்று போராட்ட தேதியை 14 ம் தேதிக்கு மாற்றி அறிவித்தபோது சொல்கிறது பொய்யர் அண்ணன் ஜமாஅத். [இந்த முரண்பாட்டை உணர்வு பத்திரிக்கையில் ஒரேபக்கத்தில் இடம்பெற செய்து தங்களை பத்திரிக்கை ஞானசூன்யங்களாக காட்டிக்கொண்டது தனிக்கதை]

முதல் அறிவிப்பில் ஜெயலலிதாவின் ஆசியோடுதான் தமுமுக இந்த ஆக்கிரமிப்பை செய்தது என்றவர்கள், இரண்டாவது அறிவிப்பில் அதிமுக அரசின் ஆதரவுடன் தான் தமுமுக இந்த அராஜகத்தை செய்ததா என்று சந்தேகம் என்கிறார்கள். முதலில் சந்தேகப்பட்டு பின்பு தீர விசாரித்தபின் உறுதிப்படுத்துவதுதான் உலக நடைமுறை. ஆனால் இவர்களோ முதலில் அறுதியிட்டு உறுதியாக முடிவெடுத்து விட்டு, பின்னர் சந்தேகம் கொள்கிறார்களாம். அடாடா! என்னே அறிவு..?

அடுத்து இவர்களின் வேடிக்கை பாருங்கள்;

ஜூன் 9ஆம் தேதி போராட்டத்திற்காக மக்களை திரட்டும் பணியை ததஜ முடுக்கி விடும் பிரச்சாரங்களை கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ததஜ நிர்வாகிகளை அழைத்து, உணர்வு அலுவலகம் உங்களுடையதுதான்; ஜூன் 9ஆம் தேதி தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவலகம் ஒப்படைக்கப்படும்' என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்என்று கூறி 14 ம் தேதிக்கு முற்றுகை ஒத்திவைப்பு என்றார்களே! உயர் அதிகாரிகள் சொன்னபடி ஜூன் 9ஆம் தேதி இவர்கள் கையில் சாவியை கொடுத்து விட்டார்களா? என்றால் இல்லவே இல்லை. சரி சாவி கிடைக்கவில்லையானால் இவர்கள் அறிவித்தபடி 14 ம் தேதி சட்டமன்ற முற்றுகை அல்லது முதல்வர் வீடு முற்றுகை உறுதியாக நடைபெறும் என்று சொல்ல வேண்டுமல்லவா? இப்போது அதிலிருந்தும் பல்டியடித்து அடுத்த சட்டமன்றம் எப்போது கூடுகிறதோ அன்றைக்கு முற்றுகை என்று அறிவித்து விட்டு ஆழ்ந்த சயனத்திற்கு சென்றுவிட்டது அண்ணன் ஜமாஅத். அடுத்த சட்டமன்றம் எப்போது கூடும்..? தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்து விட்டார். அந்த வகையில் பொய்யர் அண்ணன் ஜமாஅத்தின் போராட்டமும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.

அதே நேரத்தில் அண்ணன் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார். எப்படி எனில், 'மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்கணும்' என்று கிராமப்புறங்களில் சொல்வழக்கு உண்டு. அதே போல் முன்னாள் உணர்வு அலுவலகத்தை தமுமுக பயன்படுத்தக் கூடாது. அதை அரசே தன் வசம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் வெற்றி பெற்று விட்டார். இப்போது அந்த அலுவலகத்தின் சாவி தமுமுகவிடமிருந்து பெறப்பட்டு அண்ணன் கைக்கு வராமல் அரசு கைக்கு சென்று விட்டது என்று அண்ணனே கூறுகிறார். பிறகு என்ன? நாலு பேர் நல்ல விதமாக தொழுது கொண்டிருந்த எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசலை தனது குறுக்கு புத்தியால், 'உனக்கும் வேணாம்; எனக்கும் வேணாம். இங்கே எவனும் தொழாமல் பூட்டிடுவோம் என்று பூட்டவைத்தது போல், இனி முன்னாள் உணர்வு அலுவலகம் தமுமுகவுக்கும் பயன்படாமல் அண்ணனுக்கும் பயன்படாமல் RTO விசாரணை அது இது என்று ஆயுளுக்கும் இழுபடும். அதுதானே அண்ணனின் நோக்கமும்.

வாழ்க!இன்னும் அண்ணனை நம்புபவர்கள்!

0 comments to “அண்ணன் ஜமாஅத்தின் சட்டமன்ற முற்றுகை; தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates