பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை ஏன் எதற்கு? விளக்க பொதுக்கூட்டம்.
விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு மார்க்கம் மற்றும் சமூகப் பணியாற்றும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், 450 வருட காலம் அல்லாஹ்வை வணங்கி வந்த பாபரி மஸ்ஜித் காவி கும்பல்களால் அபகரிக்கப்பட்டு, தரை மட்டம் ஆக்கப்பட்டதை நாம் அறிவோம். அப்பள்ளியினை மீட்ப்பதற்கான ஜனநாயக நடவடிக்கையை எடுத்து வருகிறது.இதற்கான விழிப்புணர்வு வாகன பயணம் ஒன்றை வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் டிஸம்பர் 5ஆம் தேதி வரை மேலப்பாளையம் முதல் சென்னை வரை நடததிட முடிவு செய்துள்ளது. இந்த பயணத்திற்கு பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை என பெயரிட்டு இந்த பயணத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொடங்கவுள்ளது.
இதற்கான விழிப்புணர்வு போஸ்டர், நோட்டீஸ், கூட்டங்கள் என மக்களிடம் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கிறது.
சென்ற 23ஆம் தேதி மண்ணடியில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று வட சென்னை மாவட்டச் செயலாளர் புகாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் S.M.பாக்கர், மாநில பொருளாளர் அபூபக்கர் (தொண்டியப்பா), மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் மற்றும் மாநில பேச்சாளர் மஸுதா ஆலிமா உள்ளிட்டவர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியினை வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.