இந்திய தௌஹீத் ஜமாஅத் நடத்த இருக்கும் பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை பற்றி சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது!
இது குறித்து நேரிலும் தொலை பேசியிலும், இ.மெயில் மூலமும் அனைத்து சமுதாய தலைவர்களும் தொண்டர்களும் இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு தங்கள் ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே சரியான நேரத்தில் சரியான போராட்டங்களை கையில் எடுத்து வருவதாகவும் ,உங்கள் ராதா ஊர்வலப் பாதையில் எங்கள் ஊரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
அல்ஹம்து லில்லாஹ் !
அந்த வகையில் குறித்த தகவலைக் கேள்விப்பட்டு ஐ.என்.டி.ஜே தலையகத்திற்கு வந்த இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகளான சகோ.தர்வேஷ் ரஷாதி சகோ.முஜிபுர் ரஹாமன் பாகவி ஆகியோர் ரத யாத்திரைக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.