திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, October 24, 2011

INTJ ரத யாத்திரைக்கு ஆதரவு! சமூக சேவகி சத்யா அனுபா கடிதம்.

,

உங்கள் ரத யாத்திரை நியாயமானது. அவசியமானது! -ஒர் இந்து சகோதரியின் ஆதரவு கடிதம்!

அன்பின் INTJ நிர்வாகிகளே! நம் அனைவரின் மீதும் இறை சாந்தி உண்டாகட்டும்....
உங்கள் அமைப்பு செய்து வரும் பல சமுதாய பணிகளை நான் உங்களின் மக்கள் ரிப்போர்ட் மூலம் அடிக்கடி அறிவதுண்டு. அதில் இரண்டு வாரங்களுக்கு முன் பாபர்   மஜ்ஜித்   மீட்க ரத யாத்திரை என்று ஒரு தலைப்பு பார்த்தேன். பார்த்து ஆச்சரியம் பட்டேன். என்ன இது முஸ்லிம்கள் ரத யாத்திரை?! என்று உங்கள் ஜமாஅத் நண்பர்கள் மூலம் நான் கேட்ட போது அவர்கள் சொன்ன விதம் மிகவும் பொருத்தமாக இருந்தது.
காரணம் இந்த நாட்டை மத துவேஷத்தால் துண்டு துண்டுகளாக ஆக்கி இன்று முஸ்லிம்கள் ஒரு அன்னியர்கள் போல் பாவிக்கப்படுவதற்கு மிக முக்கிய  காரணம். இந்த டிசம்பர் 6 தான். அந்த கொடும் சம்பவம் தான் நமக்கு மத்தியில் ஒரு இடை வெளியை உண்டாக்கிவிட்டது.
ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட பாதிப்பை யார் உண்டாக்கினாலும் அது தவறு தான். நான் ஒரு இந்துவாக இருந்தாலும் இதை சொல்வதற்கு காரணம். முதலில் நான் ஒரு மனிதாபிமானம் உள்ள, இந்த நாட்டை நேசிக்கக்கூடிய, சட்டத்தை உயிராய் மதிக்க கூடியவள். எனவே தான் எனக்கு பாபரி பள்ளிவாசல் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அந்த ரணத்தை நானும் உணர்ந்து இதை இங்கே பதிவு செய்கின்றேன்..
நான் ஒரு சமூக சேவகி..அதனால் தான் நான் முஸ்லிம், இந்து என்று பார்க்கவில்லை. எனவே உங்கள் ரத யாத்திரை நியாயமானது. அவசியமானது. நானும், என் போன்றவர்களும் இதை ஆதரிக்கிறோம்.. வாய்ப்பு இருந்தால் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். 
எனக்கு ஒரு வேண்டுகோள்...  இந்த ரத யாத்திரையில் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு வந்து, பாசிச வாதிகளை அனைவரும் இனம் காண வேண்டுமானால் உங்கள் ஜமாதோடு மற்ற ஜமாத்கள்,  என்னை போல் பல இந்து சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொள்ள நீங்கள் வழி வகை செய்ய வேண்டும்.. என்று பணிவாக இங்கே கேட்டு முடிக்கின்றேன்... உங்கள் இந்த பள்ளி மீட்பு யாத்திரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்..


வாழ்த்துகளுடன்...
சத்யா அனுபா
சமூக சேவகி...
தமிழ்நாடு, கர்நாடகா

0 comments to “INTJ ரத யாத்திரைக்கு ஆதரவு! சமூக சேவகி சத்யா அனுபா கடிதம்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates