பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் மதிய உணவு சரியாக வேகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தனக்கு போடப்பட்ட சாப்பாட்டு தட்டோடு சட்டமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கே நேரடியாக சென்று முறையிட்டுள்ளான் ஒரு பள்ளிமானவன். இதுக்கெல்லாமா சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று நமக்கு என்னத்தோன்றலாம்!. ஆனால் தனக்கு அரசு வழங்கும் உரிமையை, அதிகாரிகள் சரியாக வழங்கவில்லை என்று இவன் வீறுகொண்டு அரசாங்கத்தின் அங்கதிற்கு எடுத்துச்சென்று, தன் உரிமையை மீட்டு அதை மீடியாவின் வெளிச்சத்திற்கும் கொண்டுவந்த இந்த சிறுவன் எங்கே?. எது நடந்தாலும் எனக்கென்ன?. நமக்கென்ன?. என்று இருக்கும் நாம் எங்கே?.
கல்வி முதல் ஆட்சி அதிகாரம் வரை எல்லாவற்றையும் இழந்து நிற்கும் சிறுபான்மை சமுதாயம், விழிப்புணர்வு அடையாத வரை இந்த நிலைமையை யாராலும் மாற்ற முடியாது என்பதை நினைவில் வையுங்கள்.!.
எந்த குறையையும் ஆள்வோரிடம் உரிய நேரத்தில் முறையிட்டு அதை சரிசெய்ய முயலவேண்டும். நம் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அது எந்த விதமான உரிமையாக இருந்தாலும் சரியே!.
இனி நக்கீரனில் வந்த செய்தி உங்களுக்காக...!
சாப்பாட்டு தட்டுடன் எம்.எல்.ஏ வீட்டுக்கு வந்த மாணவன்
சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. செல்வம், இவரது வீடு பூலாவாரி கிராமத்தில் உள்ளது. சாளியின் முன்னாலேயே இருக்கும் இவர் வீட்டுக்கு சாதாரணமாக யார் வேண்டுமானாலும் இவரது வீட்டுக்கு போய் வரலாம். நேற்று மதியம் வீரபாண்டி ஒன்றியத்தில் நடக்கும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டுகொண்டிருந்தார் செல்வம். அப்போது பூலாவாரி அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 7 வகுப்பு மாணவன் ஒருவன் கையில் சாப்பாட்டு தட்டுடன் எம்.எல்.ஏ வீட்டுக்குள் வந்துள்ளான்.
அங்கிருந்த எம்.எல்.ஏ, எஸ்.கே. செல்வத்திடம் பள்ளிகூடத்தில் போடும் சாப்பாடு நல்ல இல்லை... காய் நல்ல வேகாம இருக்குது... என்று சொல்லியுள்ளான். அந்த மாணவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பின்னாலேயே பள்ளிக்கு சென்ற செல்வம் சாப்பாடு செய்யப்படும் இடம், பாத்திரங்கள், அரிசி மற்றும் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார்.
அனைத்தும் சுகாதாரமான முறையில் இருந்தாலும் காய்கறிகள் சரியாக வேகவில்லை என்பது தெரிந்தது. இனிமேல், அரிசியையும், காய்கறிகளையும் நன்றாக வேகவைத்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களிடமும், சத்துணவு அமைப்பளரிடமும் அறிவுறை சொலிவிட்டு வந்துள்ளார்.
நன்றி: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=64849