இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்பாபர் மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு பிற மத மக்களிடமும் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த 14-11-2011 ஐஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு வருகை தந்த சமுதாய மக்கள் ரிப்போர்ட்டின் ஆரம்பகால வாசகரான சென்னை சேலையூரைச் சேர்ந்த சகோதரர் சீனிவாசன் என்பவர் பாபர் மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரைக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு அதற்கென நன்கொடையாக ரு. 5000 க்கான காசோலையை வழங்கினார். அதோடு தன்னுடைய இந்த தள்ளாத வயதிலும் நெல்லையில் பாபர் மஸ்ஜித் யாத்திரையில் பங்கெடுக்கும் வகையில் தனது நேரத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.
அதே போன்று திருவல்லிக்கேணி பகுதியில் விளம்பர பேனரை அங்கு வைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் இந்த ரதம் சென்னைக்கு என்று வருகிறது அதில் நான் கலந்து கொள்ளவேண்டும் எனக் கூறிய சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியலுக்கும் அனச்சரங்களுக்கும் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கில் செலவழிக்கும் சமுதாய புரவலர்கள் அல்லாஹ்வின் பள்ளியை மீட்கும் போராட்டத்தில் தங்கள் காசை செலவழிக்க தயங்கும் போது தள்ளாத வயதில் தன சேமிப்பை முஸ்லிம்களின் போராட்டத்திற்காக வழங்கும் அற்புதம் அல்லாஹ் அருளன்றி வேறென்ன?.
இந்த சமுதாயத்தை சேர்ந்த இளைன்கர்கள் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்கு ஆயரம் சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருக்க முதியவர்கள் இதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவது இறைவனின் விந்தையன்றி வேறென்ன?