திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, December 9, 2011

தஞ்சை மாவட்டம் இதஜ சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

,

அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் சார்பாக பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைதுச்செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு காலை 10:30 மணிக்கு  நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு M.S. ரஹமத்துல்லாஹ் (தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர்) தலைமை தாங்கினார். குடந்தை ஜாஃபர் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்) மற்றும் ஷாஜித் பாட்சா (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்) முன்னிலை வகித்தனர்.
கோவை ஜாஃபர் (மாநில செயலாளர்) மற்றும் நாச்சியார்கோவில் ஜாஃபர் (மண்டல செயலாளர்) ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாநில செயலாளர்  கோவை ஜாஃபர்  அவர்கள் பேசும் போது,முஸ்லிம்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் நியாயங்களை அரசு உணர்ந்து இப்போராட்டத்தின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அதேபோல் பாபர் மஸ்ஜித் இடம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய அகமதாபாத் உயர் நீதிமன்றம் மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளோம்” என்று கூறினார்.





மாற்றுமத சகோதரர்களும் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்.(அல்ஹம்துலில்லாஹ்).

0 comments to “தஞ்சை மாவட்டம் இதஜ சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates