தானே புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரசு நிவாரணங்கள் இன்னும் போய்ச் சேராத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான குழு பாதிக்கப் பட்ட மக்களின் அவல நிலையை படம் பிடித்து வின் டி.வியில் ஒளி பரப்பியது! இந்தப் புயலில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களின் நிலையையும் , மற்ற மக்களாவது வீதியில் இறங்கி போராடும் நிலையில் போராடக் கூட தெரியாத சமுதாயமான இஸ்லாமிய சமுதாயம் உள்ள நிலையை எடுத்து சொல்லி சமுதாய சொந்தங்கள் பாதிக்கப் பட்டுள்ள முஸ்லிம்களுக்கு நேரடியாக வந்து உதவ வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூலம் கோரிக்கை விடுக்கப் பட்டது!
இந்தக் கோரிக்கையை ஏற்று ஒரு சகோதரர் 5 லட்சமும் இன்னொரு சகோதரர் 1 லட்சமும் கொடுத்து உதவ முன்வந்தனர். இதை நீங்களே நேரில் வந்து கொடுங்கள் என கூறியும் பரவாயில்லை நீங்களே கொடுங்கள் எனக் கூறினர்.
அல்ஹம்துலில்லாஹ் ! தொலைக் காட்சி நிகழ்ச்சியில் வைத்த கோரிக்கையை ஏற்று 6 லட்சத்தை இருவர் மட்டுமே வழங்கியது அவதூறுகளை தாண்டி INTJ வின் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நிருபித்துள்ளது!
அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வண்ணம் நேற்று 18.1.12 அன்று காலை எஸ்.எம்.பாக்கர் மற்றும் பாண்டிச்சேரி பீர் முஹம்மத், பண்டுருட்டி யூனுஸ் ,
கடலூர் அமானுல்லாஹ் , மதுக்கூர் மைதீன், வட சென்னை இஸ்மாயில் ஆகியோர் அடங்கிய குழு கடலூர் OT , பரங்கிப்பேட்டை நெல்லிக்குப்பம், ஆண்டிக் குப்பம் , பண்டுருட்டி போன்ற பகுதிகளில் முன்னதாக தேர்ந்தடுக்கப்பட்டு INTJ நிர்வாகிகளால் டோக்கன் வழங்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு தலா 2000 ருபாய் வீதம் வழங்கப் பட்டது!
நிவாரணத் தொகையை பெற்ற மக்கள் 'அரசாங்க நிவாரணம் கூட இன்னும் எங்களை வந்து சேரவில்லை ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூலம் எங்களுக்கு கிடைத்த இந்த உதவி காலத்தினால் செய்த உதவி' என்று நெகிழ்ந்தனர். அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுங்கள் ! இதை வழங்கிய இரு சகோதரர்களுக்கும் துவா செய்யங்கள் என நம் நிர்வாகிகள் அவர்களிடம் கூறினர்.