திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, January 19, 2012

உயிர் பிழைக்க காயல்பட்டிணம் சிறுவனுக்கு உதவிடுவீர்!

,
காயல்பட்டிணம், 220/83, பெரிய நெசவுத் தெரு, என்ற முகவரியில் வசித்து வரும் M.A. தஸ்தக்கீர் என்பவரின் 9 வயது மகனான முஹம்மது அலி  எல்.கே. மெட்ரிக்குலேசன் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 13.01.2012 அன்று பள்ளிக்கு சென்ற அச்சிறுவன் திடீரென மதிய வேளையில் பிக்ஸ் (வெட்டு) வந்து படிக்கட்டில் விழுந்து வலது கை, கால் செயலிழந்த நிலையில் நமதூர் KMT மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பையனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் DR. இஸ்மாயில் அவர்கள் திருச்செந்தூரில் உள்ள நரம்பியல் மருத்துவர் கனி அவர்களிடம் சேர்க்க பரிந்துரைத்தார்கள்.
அங்கு கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை செய்யப்பட்டும் சிறுவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், ஸ்கேன் ரிப்போர்டில் தலையின் பிடரி பகுதியில் மூளைக்கு செல்லக் கூடிய நரம்பு நைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. அதனால் திருநெல்வேலி கிருஷ்ணா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இச்சிறுவனின் தந்தை M.A. தஸ்தக்கீர் பெயிண்டிங் தொழில் செய்து வருகின்றார். இத்தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப செலவிற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது எனவும், இந்நிலையில் அவரது மகனுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் கடன் வாங்கியும், சிறிதாக சேமித்த தொகையை கொண்டும் சிகிச்சை செய்து வருவதாகவும் தெரிவித்த அவர் தற்போது தனது மகனை ICU–ல் வைத்து சிகிச்சை செய்து வருகிறார்.
எனவே மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு என்னிடம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் மருத்துவ செலவிற்கு உதவி செய்யுமாறு பொதுமக்களிடம் இம்மடல் மூலம் வேண்டிக் கொள்கிறார். அவரது அலைபேசி எண் : 98941 60397.
வல்ல இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சரீர சுகத்தையும், நோயற்ற வாழ்வையும் தருவானாக ஆமீன்!
-முத்து இஸ்மாயில்,
காயல்பட்டிணம்.

0 comments to “உயிர் பிழைக்க காயல்பட்டிணம் சிறுவனுக்கு உதவிடுவீர்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates