
கீழக்கரையில் கிழக்குத்தெரு, மேலத் தெரு, தெற்குத் தெரு மற்றும் சின்னக் கடை தெரு மற்றும் முஸ்லிம் பஜார் ஆகிய இடங்களில் சமூக தீமைக்கான எதிர்ப்பு தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 29.12.2011 அன்று மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமையில் நடைபெற்றது.
அதில் வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது மற்றும் மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கீழை ஜமீல், இந்திய தவ்ஹீத் ஏன் எதற்கு? என்ற தலைப்பிலும், முஹம்மது முஹைதீன் வரதட்ணை, ஈமானின் தன்மை குறித்தும் உரை நிகழ்த்தினார். உரைகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
முன்னதாக மாநில நிர்வாகிகள் அபூபக்கர் (எ) தொண்டியப்பா, பிர்தவ்ஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் பக்கீர் ஒலீ, மாவட்ட பொருளாளர் ஹாஜா, மக்கள் தொடர்பாளர் கமால், நகர நிர்வாகி நியாஸ். ஹாஜா அணீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
-இப்னு லத்தீஃபா.