இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஃவா குழு தன்னுடைய தஃவா களத்தை விரிவு படுத்தும் நோக்குடன் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப் பயணத்தில் இருந்து வருகிறது ! மக்கள் கூடும் இடங்களிலும் மருத்துவ மனைகளிலும் தஃவா செய்யும் வழி முறையை நேரடியாக கிளை மாவட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் மற்றும் துணைத்தலைவர் முஹம்மத் முனீர் ஆகியோர் தங்களின் புயல் வேக செயல்பாட்டின் மூலம் மாவட்டந்தோறும் பயணித்து வருகின்றனர்.
நேற்று சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரங்கள் நடை பெற்றதோடு மாலை அரசு மருத்துவ மனைகளில் அழைப்புப்பணி நடை பெற்றது.இதில் மண்டல செயலாளர் புரைதா இஸ்மாயில் மற்றும் ஹுசைன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.