திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, January 19, 2012

சக்கரில் இருந்து பாதுகாப்பு! தாராபுரம் INTJ வின் தஃவா பணிகள்.

,

ஸகர்ரில் இருந்து பாதுகாப்பு -

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் நகரம் தன்னுடைய தஃவா பணியால் மற்ற மக்களுக்கு முன் மாதிரியாக உள்ளது . அதில் சக்கரில் இருந்து பாதுகாப்பு தேடுவோம் எனும முழக்கத்தோடு மாதம் ஒரு ஏழைக் குடும்பத்தை தேர்ந்தெடுத்து அக்குடும்பத்திற்கு தேவையான அரிசி மளிகை   பொருட்களை வாங்கி கொடுத்து வருகிறது! 

சக்கர் எனும் நரகத்தில் உங்களை நுழைய செய்தது எது? நாங்கள் தொழுவோராகவும்   ஏழைகளுக்கு உணவளிப்போரகவும் இல்லை !      [அல்குரான்]   
இந்த இறை வசனத்தின் அடிப்படையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இந்த முயற்சியை மற்றவர்களும் பின் பற்றி சக்கர் எனும் நரகத்தில் இருந்து பாதுகாவல் தேடுவோமாக!  மற்றவர்களை உணவளிக்க தூண்டுவோமாக!


ஏகத்துவ எழுச்சியும்!! ஷிர்க்கின் வீழ்ச்சியும்!!!

 பட்டி தொட்டியெல்லாம் தவ்ஹீத் கொள்கையை பரப்பி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கடந்த 16/1/2012 அன்று சமூகதீமை ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டது,
              இதில் INTJ மாநில துணைத்தலைவர் முகம்மது முனீர் அவர்களும் INTJ மாநில பேச்சாளர் முகையத்தீன் அவர்களும் கலந்து கொண்டு தாராபுரம் ஜின்னா மைதானம்,அஞ்சுமன் திண்ணை மற்றும் காளிபாளையம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர், 
              பிரச்சாரத்தின் போது காளிபாளையத்தில் ஒரு முஸ்லீம் சகோதரர் தனது கைகளில் கட்டியிருந்த கருப்பு கயிறைப்பற்றி முகம்மது முஹையத்தீன் அவர் களிடம் விளக்கம் கேட்டார், 
              இது இணைவைப்பு,இந்த கயிறை அணிந்திருந்தால் சொர்க்கம் செல்ல முடியாது என்று குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முகம்மது முஹையத்தீன் அவர்கள் விளக்கம் அளித்தவுடன் உடனே அதனை அறுத்து எறிய அந்த சகோதரர் முன்வந்தார்,(அல்ஹம்துலில்லாஹ்)
            பிறகு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாராபுரம் நகரச்செயலாளர் M.Fசையது இப்ராஹிம் கயிறை அறுத்து விட்டு, நபி(ஸல்) அவர்கள் கூறிய கருவுற்ற செந்நிற ஒட்டகையை பெற்றதற்கு இணையான நன்மையைப் பெற்றுக் கொண்டார்,(அல்ஹம்துலில்லாஹ்)


சந்தோசம் சகோதரா!!!

எந்த விதமான வேறுபாடு இல்லாமலும் காழ்ப்புணர்வுகள்  இல்லாமலும்  நம்முடைய முஸ்லீம் இயக்க தலைவர்களான இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர்  s.m.பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் கோவை ஜாபர், .தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின்  மாநில அமைப்பாளர் குனங்குடி அனிபா,மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி,  S.D.P.I யை சேர்ந்த மாநில நிர்வாகிகளும் மற்றும் அனைத்து சுன்னத் வல் ஜமாத்தார்களும் 
கடந்த ஜனவரி 14,15,ம் தேதிகளில்  JAQH நடத்திய படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி என்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டது இயக்கங்கள் வேறுபட்டாலும் எங்களுடைய ஈமான் வேறுபடவில்லை என்று பறைசாற்றியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.  



இதைப் பார்த்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மீண்டும் உதயமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது.  மக்கள் கூட்டத்தை வைத்து பெருமையும் இல்லை.  அடுத்தவர்களை திட்டி வசைபாடவும் இல்லை.  மாநாட்டின் இரண்டு நாட்களிலும்  அந்த மாநாட்டுத் திடல் முழுவதும் குர்ஆனும் ஹதீஸும் தவழ்வதைக் கண்டபோது சந்தோஷம் சகோதரா!!!!!!!!!!!!!!!!!!!!!.


செய்தி -மார்வலஸ் ஷாகுல் 

0 comments to “சக்கரில் இருந்து பாதுகாப்பு! தாராபுரம் INTJ வின் தஃவா பணிகள்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates