மாநாட்டில் குணங்குடி ஹனிபா அவர்கள் அருகில் எஸ்.எம்.பாக்கர்.
எல்லோரோடும் இணக்கம் ஏகத்துவத்தில் உறுதி எனும் கொள்கை முழக்கத்தோடு அனைத்து முஸ்லிம் அமைப்புகளோடும் நல்லுறவைப் பேணி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 'நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்' எனும் இறை வசனத்தின் அடிப்படையில் அவர்களின் நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறது !
ஜமாஅதே இஸ்லாமி, அஹ்லே ஹதிஸ், PEACE மாநாடுகளில் ஏற்கனவே பங்கேற்றது போல் தற்போது தமிழகத்தின் தவ்ஹித் அமைப்புகளின் தாய்ச்சபையான JAQH அமைப்பின் மாநாட்டில் இந்திய தவ்ஹீத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். . முன்னதாக தன்னுடைய உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாமல் தலைமையகம் வந்து அழைத்த தமிழகத்தின் மூத்த தவ்ஹீத் சகோதரர் எஸ்.கமாலுதீன் மதனி அவர்களின் அழைப்பை ஏற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் ஒரு பார்வையாளராக இதில் கலந்து கொண்டார்.
ஒரு இஸ்லாமிய அமைப்பின் மாநாடு பற்றிய விளம்பரங்களை இன்னொரு அமைப்பின் ஊடகங்களில் வெளியிடாத தமிழக முஸ்லிம் இயக்க சூழலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தங்கள் பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி நிகழ்சிகளில் ஜாக் மாநாடு பற்றிய விளம்பரங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது!