காதலர் தினம் எனும் பெயரில் கலாச்சார சீரழிவில் சிக்கும் இளைஞர்களை காக்க கடந்த ஆண்டு கடற்கரையில் களமிறங்கிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மகளிர் அணி பர்தா அணிந்த 10 பெண்களை அணுகி தஃவா செய்த போது அந்த பெண்களில் 9 பேர் முஸ்லிமல்லாத ஆண்களோடு காதல் கொண்டு கடற்கரை வந்திருப்பது தெரிய வந்தது .
சமுதாய பெண்களின் இந்த அவல நிலையை போக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பிப்ரவரி மாத தொடக்கம் முதலே தனது பிரசாரத்தை துவங்கி விட்டது. போஸ்டர் பிட் நோட்டிஸ் மற்றும் தெருமுனை பிரசாரம், பெண்கள் பயான், ஜும்மா பாயான் போன்ற வழிகளில் கலாச்சார சீரழிவை எடுத்து சொல்வதோடு இந்த ஆண்டும் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 14 அன்று திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்.காரனோடை பகுதிகள் மற்றும் கடற்கரையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. தனியொரு ஜமாத்தால் இதை தடுத்து விட முடியாது அனைத்து சமுதாய இயக்கங்களும் ,மகல்லா ஜமாத்துகளும் களமிறங்கி இந்த தீமைக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும்.

