மக்கள் கூடும் பஸ் இரயில் நிலையங்களிலும் மார்கெட் பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் மார்கத்தை எடுத்து சொல்வதை தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் கடந்த 05.02.2012 ஞாயிறு அன்று செங்குன்றம் , பஜார் பகுதிகளில் தெரு முனைப் பிரசாரம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் A.M. இனாயதுல்லாஹ். காஞ்சி மாவட்ட அழைப்பாளர் குன்றத்தூர் ஹனிப் உள்ளிட்ட நிர்வாகிகளும், திருவள்ளூர் மாவட்டதலைவர் வேலூர் இப்ராஹீம் துணை செயலர்கள்: செங்குன்றம் முபாரக், செங்குன்றம் ஷஃபியுல்லாஹ் பொருளாளர் : ஆவடி ஜாஹிர் ஹுஸைன். உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை கொடுத்தான், மெகா போன் மூலமும் அழைப்புப்பணி செய்தனர்.
மாநில பேச்சாளர் முஹம்மத் மைதீன்.திருவள்ளூர் மாவட்டதலைவர் வேலூர் இப்ராஹீம் கலந்து கொண்டு தன்னுடைய சிறப்பான உரையின் மூலம் மக்களை தன பக்கம் ஈர்த்தார்.
- படங்கள் மற்றும் செய்தி. யூனுஸ் பாஷா