திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, February 13, 2012

அண்ணன் ஜமாஅத் என்ன பாலியல் பல்கலைக் கழகமா?

,
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி :
சமீபத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து திருவள்ளூர் மாவட்டத் தலைவராக ஆகியுள்ள வேலூர் இப்ராஹீம் மீது பாலியல் குற்றச்சாட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளதே! உண்மையா?

-கலீலுர் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம்.
பதில் : வேலூர் இப்ராஹீம் நல்லவரா? கெட்டவரா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் அவர் அவ்வாறு குற்றம் செய்தவர் என்றால் கூட அவர் தமுமுகவில் இணைந்தபோது அதை வெளிப்படுத்தாத முகவரியற்றவர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்தவுடன் பரப்பும் நோக்கம், அண்ணன் ஜமாஅத்தின் ஒரே எதிரி இந்தியதவ்ஹீத் ஜமாஅத் என்று காட்டுவதர்காகவா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், ஒரு மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியாகும் மாணவன் மருத்துவர் என்ற பட்டத்தை சுமந்து வெளியாகின்றான். ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து வெளியாகும் மாணவன் என்ஜினீயர் என்ற பட்டத்தை சுமந்து வெளியாகின்றான். ஒரு அரபி மதரசாவில் இருந்து வெளியாகும் மாணவன் மவ்லவி என்ற பட்டத்தை சுமந்து வெளியாகின்றான். இவ்வாறு ஒவ்வொரு கல்வியங்களில் இருந்தும் வெளியாகும் மாணவர்கள் அந்த கல்வியகம் வழங்கும் பட்டத்தோடு வெளியாகும் நிலையில், குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சமுதாயத்தை வார்த்தெடுக்கும் ஜமாஅத் என்று சொல்லிக்கொள்ளும் அண்ணன் ஜமாத்திலிருந்து வெளியாகிறவர்களுக்கு 'பாலியல்' பட்டம் கொடுத்து அண்ணன் ஜமாஅத் கவுரவிக்கிறதே! அப்படியானால் அண்ணன் ஜமாஅத் என்ன பாலியல் பல்கலைக் கழகமா!!??
இதுவரை அண்ணன் ஜமாத்திலிருந்து வெளியாகிய அனைவர் மீதும் பாலியல்-ஊழல் தவிர வேறு பட்டங்கள் அண்ணன் ஜமாத்தால் வழங்கப் படவில்லை என்பதையும், இன்னும் இதுபோன்ற பாலியல் வாதிகள் ஜமாத்தில் இருக்கலாம் என்று அண்ணனே கூறியுள்ளதால், அண்ணன் ஜமாத்தில் இருப்பவர்கள் குர்ஆன் ஹதீஸ் பாடத்தைவிட பாலியல் பாடம் அதிகமாக கற்கும் வாசல் விரிவாக திறக்கப்பட்டுள்ளதோ என அச்சம் எழுகிறது. அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
-அப்துல் முஹைமீன்.

0 comments to “அண்ணன் ஜமாஅத் என்ன பாலியல் பல்கலைக் கழகமா?”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates