திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, February 12, 2012

கீழக்கரை தொடர் மின்வெட்டை கண்டித்து அனைத்து அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

,
தமிழக மக்களை கற்காலத்து இழுத்து செல்லும் தொடர் மின் வெட்டால் தமிழகம் கடும் பாதிப்பு உள்ளாகி உள்ளது. சொல்லில் அடங்கா துன்பங்களை மாணவர்களும், மக்களுகம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த அநியாயத்தை கண்டித்து வரும் (13.02.2012) திங்கள் கிழமை  கீழக்கரையில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி கீழக்கரை புதிய பேரூந்து  நிலையம் அருகில் காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, பாப்லர் பிரண்ட் ஆஃப் இந்தியா, முஸ்லிம்லீக் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் வர்த்தக சங்கங்கள், ஆட்டோ ஒட்டுநர் சங்கம், மீனவ சங்கம் மற்றும் கே.ஈ.சி.டி போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என  36 அமைப்புகள் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, இதஜவின் மாவட்ட மக்கள் தொடர்பாளர் கமால் நாஸர், “கீழக்கரை மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கும் இந்த மின் வெட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அனைத்து மக்களும் வரவேற்கின்றன. இந்த மின் வெட்டுக்கு எதிராக தமிழக அரசு சரியான தீர்வை எடுக்கவில்லை என்றால் ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கு மிகவும் சரிந்து போகும் என்றார்”.

0 comments to “கீழக்கரை தொடர் மின்வெட்டை கண்டித்து அனைத்து அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates