விழித்திருக்கும் நேரமெல்லாம் சமுதாயத்திற்க்காக உழைத்துகொண்டிருக்கும் சமுதாய பேரியக்கமான இந்திய தவ்ஹீத் ஜமாஅத். மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை செவ்வனே செய்து வருவதை நாம் அறிவோம். அல்ஹம்துலில்லாஹ்.


கழிசடைகளின் தினமான பிப்ரவரி 14 நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் காதலர்கள் தினம் என்ற போர்வையில் பெண்களை கேலி பொருளாக்கும் மேற்கத்திய கலாச்சாரத்தை இந்த மண்ணிலிருந்து அப்புறபடுத்தவும், இஸ்லாமிய சமுதாய பெண்களும் இந்த வலைக்குள் வீழ்ந்து தமது வாழ்வை சீரழிப்பதை தடுக்கவும், நம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளிர்குழு நேற்றை தினம் (14.02.2012) சென்னை மெரீனா கடற்கரையை வட்டமடித்தது.
இதில் ஏராளமான இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த இளம்பெண்கள் மாற்றுமத அன்பர்களோடு காதலர் தினத்தை கொண்டாட வந்தனர் அவர்களை லாவகமாக பிடித்து அவர்களுக்கு மார்க்கம் போதித்துள்ள ஒழுக்க மாண்புகளை எடுத்து கூறினர்.
ஒரு சில பெண்கள் “ஏங்க, நீங்க காலம் எப்படி போகுது? இன்னும் பழையதை திரும்ப திரும்ப சொல்லி போரடிகிரீங்க இந்த காலத்துல ஒரு ஆணும் பெண்ணும் பழகினா தப்பா?” என நம்மிடமே கேட்தும், “மஹரமில்லாத ஆண்களுடன் அந்நிய பெண்கள் செல்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது ” என மசூதா ஆலிமா கூறினார் .
ஐ.என்.டி.ஜே. தாயிக்கள் அப்துல் ஹமீது , அப்துல் காதிர் மன்பஈ தாஃவா குழு தலைவர் இணையதுல்லாஹ் குன்றத்தூர் ஹனீஃப் உள்ளிட்டோர் மெகா போன் மூலம் ஆங்காங்கே பிரசாரம் செய்தனர். மாநிலச் செயலாளர் காஞ்சி ஜாஹிர் ஹுஸைன், மருத்துவ அணிச் செயலாளர் M.A.கலிமுல்லாஹ். மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன், காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் முபாரக், தாம்பரம் ரஹ்மதுல்லாஹ், தென் சென்னை கலீல் ரஹ்மான் சிக்கந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குர் ஆன் ஹதீஸ் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் காதலர் தினத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரங்களும் கடற்கரை முழுதும் விநியோகித்தனர்.
இந்த பணிகளுக்கு மத்தியில் கடைமையான ம ஃ ரிப் தொழுகையும் ஜமாத்துடன் நடைபெற்றது. இந்த உன்னத பணியை பெருமபாலான மக்கள் வெகுவாக பாராட்டினர்.
-அதிரை புதியவன்