மூன் டிவியில் எதிர் மறை நேரடி ஒலிபரப்பு இன்று காலை 12 .மணிக்கு நடைபெற்றது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளரும், மகளிர் தவா சகோதரி மசூதா ஆலிமாஅவர்கள் (பெண்கள் வேலைக்கு வருவது ஆண்களுக்கு தடை) மற்றும் பத்ரிக்கையாளர் சகோதரர் .ஜெகதீசன் அவர்கள் (பெண்கள் வேலைக்கு வருவது ஆண்களுக்கு துணை) என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது!
குடும்பத்தை காக்க வேண்டிய பெண்கள் வேலைக்கு செல்வதால் குடும்பத்தில் ஏற்படும் இழப்புகளையும் , சமுதாயத்தில் நிகழும் அவலங்களையும் மிகத் தெளிவான முறையில் குரான் ஹதிஸ் அடிப்படையில் தன்னுடைய வாதத்தில் எடுத்து வைத்தார். அதே நேரம் இஸ்லாம் பெண்கள் ஆண்களோடு கலக்காத நிலையில் வேலை செய்வதையோ, பொருளாதரத்தை திரட்டுவதையோ தடுக்கவில்லை என்பதை எடுத்துரைத்தார் அல்ஹம்து லில்லாஹ்.