பாதையோர வியாபாரிகள் பலரும் தங்களின் உழைப்பில் பெரும்பகுதியை வட்டிக்கு கடன் வாங்கியோரிடம் இழந்து தங்கள் வாழ் நாள் முழுதும் அவர்களின் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாகி திரும்ப செலுத்த முடியாத நிலையில் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை கண்டு வருகிறோம்.
இந்நிலையை போக்க இயன்ற அளவு உதவி வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வீதியோரம் பழ வியாபாரம் ஒரு மாற்று மத சகோதரரிடம் பழம் வாங்க சென்ற போது வட்டிக் காரரிடம் அவர் நின்ற நிலை கண்டு, அவருக்கு வட்டியை பற்றிய இஸ்லாத்தின் நிலை குறித்து எடுத்து சொல்லி இனி வட்டிக்கு வாங்க வேண்டாம் என அவருக்கு வட்டியில்லா கடனாக சேப்பாக்கம் கிளை சார்பில் சகோதரர் அப்துல் கரீம் வழங்கிய 4000 ருபாய் வழங்கப் பட்டது.
நமக்கு சிறிய தொகை என்றாலும் இந்த சிறிய தொகைதான் அந்த பழக்கடை தண்டல்காரரிடம் மரியாதை இழந்து நிற்க வேண்டிதாயிற்று ! இந்த உதவி அவரின் வியாபாரத்திற்கு உதவியதோடு அவருக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல நமக்கு உதவியது.