திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, March 6, 2012

இதஜ வின் செங்குன்றம் கிளை சார்பாக(11.03.2012) ஞாயிறன்று இரத்த தானம முகாம்!

,

நாமும் இரத்த தானம் செய்யலாமே.

நம் நாட்டில் ஒவ்வொரு இரண்டு விநாடி காலத்திலும் யாராவது ஒருவருக்கு அவரின் உயிர் காத்திட இரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் 4 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5 லட்சம் யூனிட்கள் தான். இரத்த தானம் வழங்கிட யாரும் முன்வருவதில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. பலர் தாங்கள் தானம் வழங்க தயாராய் இருக்கிறோம் என்பதனை மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது என்று தெரியாமல் இருக்கின்றனர். தகவல் தொழில் நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த நிலை மாற வேண்டாமா.

நமக்கு இருப்பதை இல்லா தோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்தப் பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான். ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்குப் பார்வை கொடுப்பது கண்தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையே கொடுக்கலாம். ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம், இரத்தத்தைக் கொடுத்தால் போதும்.

சரி, இரத்த தானம் செய்வது பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது? அது பற்றிய பயம், அறியாமை போன்ற எவ்வளவோ விஷயங்கள் மக்களி டம் உள்ளன. அவற்றை களைந்து உயிரைக் காக்கும் இரத்த தானத்தை அளிக்க முன் வரவேண்டும்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம். ஆனால் இரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும். சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லீட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லீட்டர் இரத்தம் மட்டுமே இரத்த தானத்தின் போது எடுக்கப்படும். தானமாக அளித்த இரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை. இரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு இரத்தச் சோகை, இரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்பதற் கான மருத்துவச் சான்றிதழ் சில வேளைகளில் தேவைப்படலாம்.
இரத்த தானம் செய்யும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்தப் போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. குடித்திருக்கவும் கூடாது. இரத்த தானம் செய்ய விரும்பு பவர்களுக்கு நீரிழிவு நோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற இரத்தத்தின் மூலம் பரவக் கூடிய நோய்கள் இருக்கக்கூடாது. இரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.
யாரெல்லாம் இரத்த தானம் அளிக்கக் கூடாது. கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள, தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்ப வர்கள், போதைப் பொருள் பழக்கம் அல்லது பலரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள், வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்ப வர்கள். ஆகியோரும் பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்திலும் இரத்ததானம் செய்ய இயலாது.
இதய நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பழுதடைந்தவர்கள், இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் அளிக்க இயலாது. இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.

0 comments to “இதஜ வின் செங்குன்றம் கிளை சார்பாக(11.03.2012) ஞாயிறன்று இரத்த தானம முகாம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates