திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, April 25, 2012

போலீசாரும், இராணுவத்தினரும் வேடிக்கை பார்க்க உடைக்கப்பட்டது தம்புள்ள ஜும்மா பள்ளிவாயல்

,

இலங்கை நோக்கி மத்திய அரசு அனுப்பிய எம்பிக்கள் குழுக்கள் அங்கு இருக்கவே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது . இங்கு இருக்கும் பாசிச வெறிபிடித்தவர்களும் அங்கு உள்ள புத்த
பிக்குகளும் ஒன்றே... காரணம் இங்கு உள்ள பாபர் மஸ்ஜிதை இடிக்கும் போது அயோக்கிய கூட்டம் எந்த காரணத்தை கூறியதோ அதே காரணத்தை தான் இங்கும் கூறி உள்ளார்கள். தம்புள்ள அது புனித பூமி இது எங்கள் கோவில் இருந்த இடம் என்று காவி பிக்கு கூட்டம் சொல்லி உள்ளது. 60 ஆண்டு காலம் மிக கம்பீரமாக இயங்கி கொண்டிருந்த பள்ளி திடீர் என்று இடிக்கப்பட்டுள்ளது என்றால் தனியாக ராஜபக்ஷேவை சுஸ்மா சுவராஜ் சந்தித்திருப்பது முஸ்லிகள் இடம் ஒரு முக்கிய சந்தேகத்தை ஏபடுத்தி உள்ளது.
இறை இல்லம் இடிக்கப்பட்டதை ஒரு காலமும் ஏற்று கொள்ள முடியாது.. இதை கண்டிக்கும் விதமாக இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை ( 28 - 04 - 2012 ) அன்று மாலை 4 மணிக்கு இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது . இதில் திரளாக அனைத்து சகோதர்களும் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்...
அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க (ஆண்கள் பெண்கள் உட்பட)அனைத்து முஸ்லிம்களையும் அணிதிரளுமாறு அழைக்கிறது

0 comments to “போலீசாரும், இராணுவத்தினரும் வேடிக்கை பார்க்க உடைக்கப்பட்டது தம்புள்ள ஜும்மா பள்ளிவாயல்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates