திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, April 25, 2012

பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து இலங்கை தூதரகம் முற்றுகை!INTJ அறிவிப்பு!

,



அன்று அயோத்தி !! இன்று இலங்கை!!! 
புத்த பிக்குகளின் புனித பூமியென்று கூறி இலங்கை தம்புல்ல ஜும்மா பள்ளியை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது சிங்கள அரசு .

இது சம்பந்தமான நான்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்
INTJ தலைமையகத்தில்  நடைபெற்றது. 

இதில் வருகின்ற சனியன்று மாலை நான்கு மணிக்கு இலங்கை தூதரகத்தை முற்றுகை இடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது !

அநீதிக்கு எதிரான பலபோராட்டங்களை நடத்திய நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இறை இல்ல இழப்பை இனியும் பொறுக்கமாட்டோம் என போர்குணம் கொண்டு போராட வியுகங்களை அமைத்து வருகின்ற சனிகிழமை மாலை 4 மணிக்கு இலங்கை தூதரகத்தை முடுகையிட எத்தனித்துள்ளது
(இன்ஷா அல்லாஹ்) 

இந்த போராட்டத்தின் வாயிலாக இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் இறை இல்லம் தகர்க்கப்பட்டாலும் இனியும் பொறுக்காது இந்தியதவ்ஹீத் ஜமாஅத் என்பதை உலகுக்கு உணர்த்த இந்த போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

-அதிரை ஹசன்.

0 comments to “பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து இலங்கை தூதரகம் முற்றுகை!INTJ அறிவிப்பு!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates