திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, April 30, 2012

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இலங்கை தூதரக முற்றுகை! போராட்டத்தின் ஆவேச காட்சிகள்!

,
இலங்கையில் தம்புள்ளா பகுதில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா, புத்தமத பிக்குகள் மற்றும் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், அந்த மஸ்ஜிதை இடம் மாற்றத் துடிக்கும் ராஜபக்சே அரசைக் கண்டித்தும் நேற்று (28-04 -12) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இப்போராட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், செங்கிஸ்கான், ஆபூபக்கர் தொண்டியப்பா, அபூ பைசல், இக்பால் ஆகியோர் தலைமை தாங்கினார் 
பிறகு அங்கிருந்து ஆண்களும் பெண்களுமாக ஊர்வலமாக இலங்கை துணைத் தூதரகத்தை நோக்கி முன்னேறினர். டி.டி.கே சாலை சந்திப்பில் குவிக்கப் பட்டிருந்த காவல் துறையினரால் தடுக்கப்பட்டதும்,






மனித உரிமை ஆர்வலர் மணியின் கண்டன உரை  
 குவிந்த பத்திரிக்கையாலர்கள் 
 செருப்பால் அடிக்கும் சிலர் 




 அனைத்து மீடியாக்களும் ஆஜர் 


 அடங்காத ஆவேசத்துடன் அலைகடலென மக்கள் 






 கண்டன உரையாற்றும் செங்கிஸ் கானுடன் வேலூர் இப்ராகிம்  










 அனல் தெறிக்கும் ஆவேசத்துடன் மசுதா ஆலிமா 
 கைது நடவடிக்கை தொடர்கிறது 


 கைதாகும் போதும் கர்ஜனை 


 மண்டபத்திலும் மார்க்க சொற்பொழிவு 
காவலர்களிடம்  பதிவு செய்யும் சகோதர்கள் 


 உத்தமத் தோழர்கள் பற்றி உரமேற்றும் ஆலிம் அல்  புஹாரி 


போலீசாருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது, திடீர் என சில சகோதர்கள் இலங்கையின் கொடியை எரித்தனர் போலீசார் ஓடி வந்து அதை அணைக்கும் போதே இன்னும் சிலர் ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தினர். அனைத்து மீடியாக்களும் இந்த நிகழ்வை பாடம் பிடிக்க அல்லாஹு அக்பர் கோஷங்கள் விண்ணதிர அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அடங்காத ஆவேசத்தால் சிலர் ராஜபக்சேவின் படத்தை செருப்பால் அடித்தனர் , மாநில நிர்வாகிகளும் காவல் துறை அதிகாரிகளும் இந்த கொந்தளிப்பை கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த சிரமப்பட்டனர்.அல்லாஹ்வின் பள்ளியில் கை வைத்தால் முஸ்லிம்களின் கொந்தளிப்பு எப்படி இருக்கும் என்பதை  இந்த முற்றுகை ஆர்பாட்டம் உணர்த்தியது,

0 comments to “இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இலங்கை தூதரக முற்றுகை! போராட்டத்தின் ஆவேச காட்சிகள்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates