திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, June 6, 2012

மதுக்கூரில் இணைவைப்பை கண்டித்து இதஜ நடத்திய பொதுக் கூட்டம்

,
இறையருளால் நேற்று (05-06-2012) அன்று மதுக்கூரில் இணைவைப்புக்கு எதிரான பொதுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


மாநிலச் செயலாளர் நாச்சியார் கோவில் ஜஃபார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுக்கூர் நகரத் தலைவர் ஸெய்யது வரவேற்புரை நல்கினார்.

இஸ்லாமிய பெண்கள் அன்றும், இன்றும் என்ற தலைப்பில் மசூதா ஆலிமா உரையாற்றினார்.

இணைவைத்தல் பெரும் பாவம் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் அப்துல் காதர் மன்பஈ  உரை ஆற்றினார்.

நபித் தோழர்களும் நாமும் என்ற தலைப்பில் மாநிலப் பொதுச் செயலாளர் செங்கிஸ்கான் உரை நிகழ்த்தினார்.

தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ஷாஜித் பாட்ஷா நன்றியுரை நிகழ்த்தினார்.
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மதுக்கூர் நகரக்கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர். 
என் அருமைச் சகோதரர்களே!
இணைவைப்பை விட்டுவிடுங்கள் சகோதரகளே அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக மாறிவிடுங்கள்! அல்லாஹ் உங்ககளுக்கு மிக சமீபமாக இருக்கிறதாக பிரகடனப்படுத்துகிறான் இதோ அல்லாஹ்வின் வார்த்தைகள்!
(البقرة ) وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ
மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு  அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!(அல்ஹம்துலில்லாஹ்)  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !
 

0 comments to “மதுக்கூரில் இணைவைப்பை கண்டித்து இதஜ நடத்திய பொதுக் கூட்டம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates