திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, May 4, 2012

சிறைவாசிகளை மீட்க கோவையில் நடைபெற்ற தொடர் பொதுக் கூட்டம்!

,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்,
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் சென்ற ஞாயிறு (29/04/12) அன்று பத்து ஆண்டுகள் சிறையில் கழித்த இஸ்லாமிய மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளுடைய விடுதலை வலியுறுத்தல் பொதுக்கூட்டம் கோவை இக்பால் திடலில் சிறப்பாக நடந்து முடிந்தது. 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மக்கள் அலை கடலென திரண்டிருந்து சிறைவாசிகளுடைய விடுதலையை ஆதரித்தார்கள். வரும் அண்ணா பிறந்த நாளில் இவர்களுக்கு ஒரு நல்ல விடியல் ஏற்படும் என எதிர்பார்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அன்ஸாரி உட்பட ஏராளமான தலைவர்கள் உணர்ச்சிபூர்வமான உரைகளை ஆற்றினார்கள்.

ஏராளமான சமுதாய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்ச்சியினை இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சிறப்பாக நடத்தியது.
-அப்துல் காதர் மன்பஈ.

0 comments to “சிறைவாசிகளை மீட்க கோவையில் நடைபெற்ற தொடர் பொதுக் கூட்டம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates