திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, June 14, 2012

மியன்மாரில் (பர்மா) பொளத்த இராணுவம் பர்மிய முஸ்லிம்களை வகை தொகையின்றி கொலை

,
இலங்கையின் இன சங்காரம் தொடர்பாக இரட்டை வேடம் போடும் அமெரிக்காவும் இந்தியாவும், இலங்கையின் இன படுகொலை தொடர்பாக விசாரணைகள் தேவை என கூக்குரலிடும் பிரித்தானியா மற்றும் மேற்கு நாடுகளும் தங்களை ஜனநாயத்தினதும் மனிதாபிமானத்தினதும் திரு உருவாக காட்ட முற்பட்டுள்ளன.
இலங்கைக்கு முன்பாகவே மியன்மாரில் (பர்மா) பொளத்த இராணுவம் பர்மிய முஸ்லிம்களை வகை தொகையின்றி கொலை செய்துள்ளது. சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது. பெண்களை கதற கதற கற்பழித்து கொலை செய்துள்ளது. இந்த படு பாதக செயல்கள் உலக நாடுகளிற்கும் தெரிவதில்லை. ஊடகங்களிற்கும் தெரிவதில்லை. அங்கே நடை பெற்ற அநியாயத்திற்கும் இலங்கையில் நடைபெற்ற அநியாயத்திற்கும் என்ன வேறுபாட்டை இவர்கள் காண்கிறார்கள்? ஆம் ஒரே ஒரு வேறுபாடு. அங்கே அழிவது முஸ்லிம்கள். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இலங்கையில் தமிழர்களிற்கு பதிலாக முஸ்லிம்கள் போராடி அழிவை சந்தித்திருந்தால் ஒரு வேளை இந்த அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையை தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள். அப்போது சர்வதேச விசாரணையும், குற்றவியல் நீதிமன்றமும் மறக்கப்பட்ட வார்த்தைகளாக போயிருக்கும். மியன்மார் முஸ்லிம்களின் கண்ணீரிற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பதில் சொல்ல கடப்பாடுடையவர்கள். லிபியாவில் செத்தால் மட்டுமா முஸ்லிம்கள்? மியன்மாரில் (பர்மா) செத்தால் முஸ்லிம்கள் இல்லையா?

0 comments to “மியன்மாரில் (பர்மா) பொளத்த இராணுவம் பர்மிய முஸ்லிம்களை வகை தொகையின்றி கொலை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates