திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, June 14, 2012

ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு :

,
முஸ்லிம் அகதிகள் விஷயத்தில் பார பட்சம் வெளி நாட்டு அகதிகளை ஆதரிக்கும் விஷயத்தில், சர்வதேச அளவில், மனித நேய அடிப்படையில் பல நாடுகள் செயல் படுகின்றன.

அதில் இந்தியா தனக்கென தனி முத்திரை பதித்து செயல்படுகிறது. தற்போது, பல நாடுகளிலிருந்தும் இந்தியா வந்து தங்கியுள்ள அகதிகளின் எண்ணிக்கை 3 லட்சமாகும். அகதிகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பவர்கள், இலங்கை தமிழ் அகதிகள், இரண்டாமிடத்தில் இருப்பது நேபாள நாட்டு அகதிகள்.

சொற்ப எண்ணிக்கையில், பங்களா தேஷ் உள்ளிட்ட வேறு சில வெளிநாட்டு அகதிகளும் இதில் அடக்கம். ஒரு நாட்டில், துன்பப்பட்டு, அந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் கேட்டு வருபவர்களுக்கு, விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் போதே "ASYLUM CARD" (தஞ்சமளிக்கும் அட்டை) வழங்கப்படும்.

அப்படி தஞ்சமளிக்கும்போது, ஜாதி மதங்களை பார்ப்பது கூடாது. குறிப்பிட்ட நாட்டில், அம்மக்கள் மீது அநியாயங்கள் நிகழ்த்தப்படும் விஷயங்களை முன்வைத்து, மனித நேய அடிப்படையில் வழங்கப்படுவது தான் "ASYLUM CARD" முறை. சமீபத்தில் கூட பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக சொல்லி, (அதில், 1% கூட உண்மையில்லை. அது ஒரு வடி கட்டிய பொய் மட்டுமல்ல, அது போன்ற பொய் செய்திகளை பரப்பி, இங்குள்ள முஸ்லிம்களை கூனி குறுக செய்யும் சதி திட்டம், அது.)

அவர்களை இந்தியாவிற்கு அழைத்துக்கொள்வதோடு, அவர்களுக்கு இந்திய குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இது குறித்து பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். இப்படி, பல நாடுகளிலிருந்தும், வந்துள்ள 3 லட்சம் அகதிகளுக்கு மறு வாழ்வும், அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் இந்த அரசு, பர்மாவில் இன்னல்களுக்கு ஆளாகி, கடந்த மார்ச் மாத இறுதியில் இந்தியா வந்துள்ள, 300 முஸ்லிம் குடும்பங்களை ஆதரிக்க மறுக்கிறது.

இது குறித்து, ராஜ்ய சபையில் கேள்வி எழுப்பிய முஸ்லிம் எம்.பி., முஹம்மத் அதீபின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் பற்றி அறிவிப்பதற்கு பதிலாக, அவர்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள், என்றார். நமது இந்திய அரசு, சர்வதேச விதிகளின் படி, மனித நேய உதவிகள் எதையும் செய்து கொடுக்க வில்லை என்பதோடு, தலை நகர் டெல்லியில் தங்கியுள்ள, அவர்களுக்கு சில முஸ்லிம் அமைப்புக்கள் அரை வயிறு கஞ்சிக்கு ஏற்பாடு செய்து, சுல்தான் கௌரி தர்கா வளாகத்தில், தங்க வைக்கப்படுவதை கூட, இங்குள்ள இந்துத்துவ சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாட்டை துறந்து, நிர்க்கதியாக நம் நாட்டின் "தஞ்சமடைதல்" நடை முறைப்படி, முதலில் வசந்த் கஞ் என்ற பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். பரிதாப நிலையில், உள்ள அவர்கள் மீது இறக்கம் காட்ட வேண்டிய அரசு, முஸ்லிம் சமூகத்தின் சொந்த செலவில் செய்யப்படும் சேவைகளையும் தடுக்கிறது.

முஸ்லிம்களின் சொந்த பொது இடங்களில் தங்க வைக்கப்படுவதையும் தடுக்கிறது. துரத்தியடிக்கப்படும் இந்த பர்மா முஸ்லிம் அகதிகள், தற்போது, தெற்கு டெல்லியில் உள்ள "Zakath Foundation" என்ற அமைப்பின் 1100 சதுர மீட்டர் மட்டுமே உள்ள, சொந்த இடத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, கடும் நெருக்கடியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியின் அருகில் உள்ள தனி நபர்களுக்கு சொந்தமான காலி மனைகளை வாடைக்கு எடுத்து, அதில் கூடாரமைத்து தங்க வைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. ஒரு அரசு செய்ய வேண்டிய காரியங்களை, சில சமுதாய அமைப்புக்கள் செய்து வருகின்றன. ........

பாகிஸ்தானை விட்டு வரும் ஹிந்துக்கள் என்றாலும், பர்மா முஸ்லிம்கள் என்றாலும் அகதிகளாக வரும் அவர்களிடம் பார பட்சம் கூடாது, என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். சிந்திக்குமா இந்த அரசு?

0 comments to “ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு :”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates