குர் ஆன் நிகழ்ச்சி!
ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி இறை வேதமான திருமறைக் குர்ஆனை தொப்புள் கொடி உறவுகளான இந்து
கிறிஸ்தவ மக்களிடம் கொண்டு போய் சேர்க்க, பிறமத மக்களின் இல்லங்களிலும்
உள்ளங்களிலும் ஓரிறை சொன்ன உன்னத வார்த்தைகளை கொண்டு சேர்க்க 'மாமறை
குர் ஆனை மக்களிடம் சேர்ப்போம்' எனும் முழக்கத்தோடு கடந்த மூன்று
ஆண்டுகளில் முப்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாக்க குர் ஆனை இந்திய
தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிமல்லாத மக்களிடம் சேர்த்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி
தற்போது கடந்த ஞாயிறு அன்று கும்பகோணத்தில் ஜனரஞ்சனி ஹாலில் நடை
பெற்றுள்ளது.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மாநிலப்
பேச்சாளர்கள் முஹம்மத் முஹய்யிதீன், நாச்சியார் கோவில் ஜாபர் , ஒலி
முஹம்மத், மற்றும் பேராசிரியர் மார்க்ஸ் , மக்கள் மன்றம் தேனுகா உள்ளிட்ட
ஏராளமானோர் திருக்குர்ஆன் இந்த மனித குலத்திற்கு வழங்கிய மகத்தான நன்மைகளை
எடுத்து உரைத்தனர், மேலும் கலந்து கொண்ட முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு
திருமறை தமிழாக்கம் வழங்கப் பட்டது! தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகமும்,
கும்பகோணம் நகர நிர்வாகமும் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்து
இருந்தனர்! அல்ஹம்து லில்லாஹ்.
திருமறையை
பெற பிறமத சகோதரர்கள் வரிசையில் நின்றது ஆச்சர்யப் பட வைத்ததோடு
மட்டுமல்லாமல் இத்தனை நாள் இந்தப் பணியை செய்யாமல் இருந்து விட்டோமே எனும்
வருத்தமும் ஏற்பட்டது!