சேலம் பென்சன் லேன் பகுதியில் ரஹ்மானியா
முஸ்லிம் நலச் சங்கம் சார்பில் மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக் கூட்டம்
ஏற்பாடு செய்யப் பட்டு கடந்த ஞாயறு அன்று மிக சிறப்பாக நடை பெற்றது! இதில்
கலந்து கொண்டு பேசிய மாநில பேச்சாளர் அப்துல் காதிர் மன்பயி 'இறை
இல்லங்களும் இணை இல்லங்களும்' எனும் தலைப்பில் ஷிர்க்கிற்கு எதிரான
சாட்டையடி பேச்சால் மக்களை ஈர்த்தார், அடுத்து பேசிய மாநிலப் பொது செயலாளர்
செங்கிஸ் கான் 'நபித் தோழர்களின் தியாகம் எனும் தலைப்பில் இந்த
மார்கத்திற்காக தங்கள் உடல் பொருள் ஆவி அத்தனையும் தியாகம் செய்த
சஹாபாக்களின் வரலாறுகள் மறக்கடிக்கப் பட்டு, இயக்க வரலாறுகளும்,
சஹாபாக்களின் கால் தூசி பெறாத தனிநபர்களின் வரலாறுகளும் போற்றப்படுவதை
எடுத்துரைத்தார்! அடுத்து பேசிய தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது
இந்தியா வல்லரசாவதை தடுக்கும் சக்திகள் யார்? எனும் தலைப்பில் சங் பரிவார
சக்திகளின் சதிகளை எடுத்துரைத்தார். சேலம் மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் உள்ளிட்ட கொள்கை சகோதர்கள் ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)