திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, August 4, 2012

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற தம்பதி!

,

                           அளவிலா அன்பாளன் அனையிலா அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
அல்லாஹ்வின் மார்க்கம் ஓங்கவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக்கி செயல்படும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளையில் ரமலான் ஓர் இனிமை என்றால் இனிமைக்கு இனிமை சேர்த்தது இன்னொரு இனிமை அதுவும் ரமலான் முதல் நாளிலேயே...
        செங்குன்றம் INTJ மர்கஸ் மஸ்ஜிதே நூரில் முதல் நோன்பு திறந்தவர்களுக்கு இன்னொரு இனிமை விருந்து தான் ஒரு தம்பதியினர் இஸ்லாத்தின் பால் திரும்பியது..
   அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகளைச் சொல்லிக்கொடுத்து, பாதிமனதாக இருந்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரரின் மனைவிக்கு, INTJ திருவள்ளூர் மாவட்டத் தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் மார்க்கத்தை எடுத்துச்சொன்ன போது அல்லாஹ்வின் கிருபையால் அதே சபையிலேயே அவரும் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார். 

              அவர்களுக்கு பீர்பாய் அவர்கள் திருமறையின் தமிழ் மொழிபெயர்ப்பையும் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி புத்தகங்களையும் கொடுத்தார்.
  மறுநாளிலிருந்து அவர்கள் மஸ்ஜிதுன் - நூரில் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்களிடத்திலும், ஷாஜாகான் தவ்ஹீதியிடத்திலும் கற்று வருகின்றனர், அவர்களுக்குண்டான அனைத்து செலவீனங்களையும் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்த போது அனைவரும் உணர்ச்சி மேலிட்டு தக்பீர் சொன்னனர்.


     எனக்கு islamic inspiration நான் பணிபுரியும் என் கடையின் முதலாளி அப்துல் பாய் தான் என்று கூறிய போது,
    நமக்கு கீழாக பணிபுரியும் எத்தனைப் பேருக்கு நாம் மார்க்கத்தை சொல்லியிருக்கிறோம், அதிலும் குறிப்பாக நமக்கு கீழாக பணிபுரியும் ஒருவருக்கு நாம் மார்க்கத்தை சொல்லி அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவருக்கு போதிப்பதை நாம் நடைமுறை படுத்திக்காட்டினாலன்றி முடியாது, எனபதை கூடியிருந்தவர்கள் உணர்ந்தனர்.
   அதிலும் நாம் இஸ்லாத்தை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும்போது ந்ம்முடைய செயலே பெரும் பிரச்சாரம் செய்யும், நம் வாய் வழி பிரச்சாரங்களை முந்திக்கொண்டு.
        அதற்கொரு சிறந்த உதாரணம் தான் இந்த தம்பதியினர் இஸ்லாத்தின் பால் திரும்பிய நிகழ்வு, நாம் தூய இஸ்லாத்தை சீரிய முறையில் பின்பற்றும் போது பார்க்கும் நடுநிலைக்கண் கொண்ட யாராலும் அதைப் பின்பற்றாமல் இருக்க முடியாது  அதன் பால் ஈர்க்கப்படாமல் இருக்க முடியாது.
       சொல்லைவிட செயலுக்கே சக்தி அதிகம் என்பதை உணர்ந்து இந்த ரமலானைப் பயன்படுத்தி செயல் இஸ்லாத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வர பாடுபட்டு, பல நபர்களை மார்க்கத்தின் பக்கம் ஈர்ப்போமாக..
 
                    --------- .H.அலீம் அல்புஹாரி  

0 comments to “இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற தம்பதி!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates