நடு ரோட்டில் அன்னியனோடு ஆடிய முஸ்லிம் பெண்.
தட்டிக் கேட்டு தடுத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர்.
சென்னை கடற்கரை சாலையில் புகழ் பெற்ற நேப்பியர் பாலம் அருகில் இரவு 10 மணிக்கு மேல் பஜாரில்
இருந்து வந்து கொண்டிருந்த ஒரு சகோதரர், பர்தா அணிந்த படி ஒரு முஸ்லிம்
பெண் முஸ்லிமல்லாத இளைஞனுடன் கட்டிபிடித்து ஆடியபடி இருந்துள்ளார். இதைக்
கண்ட அந்த சகோதரர் ஐ.என்..டி.ஜே சகோதரர்களுக்கு போன் செய்து உடனடியாக வரச்
சொல்லி இதை தட்டிக் கேட்டுள்ளனர். அந்த இளைஞன நீங்கள் யார் கேட்பதற்கு
என துள்ள , அந்தப் பெண்ணோ அதை விட எகிறி, ஊரில் நடக்கும் தப்பை எல்லாம்
நீங்கள் தடுப்பீர்களா? சவ்தியிலேயே தவறு நடக்கிறது அதை தடுங்கள்! என வசனம்
பேச, காவல் துறையினர் வந்து சட்டம் பேச, மாநில செயலளர் மதுக்கூர் மைதீன்
எங்கள் கண் முன்னால் நடந்தால் தட்டிக் கேட்போம்! அதுவும் எங்கள் சமுதாயப்
பெண்கள் வழி தவறிப் போவதை தடுக்க எங்களுக்கு கடமை இருக்கிறது! என சொல்லி
இருவரையும் ஆட்டோவில் ஏற்றி திருவல்லிக்கேணி மர்கசுக்கு கொண்டு வந்தனர்!
பின்னர்
அவர்களின் பெற்றோர்களை வரச் சொல்லி விசாரித்ததில் இருவரும் ஒரே இடத்தில்
வேலை பார்ப்பவர்கள் என்றும் இருவரும் வீட்டிற்கு தெரியாமல்தான் இந்த வேலை
செய்து வருகிறார்கள் எனத் தெரிந்ததும், இவருடைய பெற்றோருக்கும் உங்கள்
பிள்ளைகளைக் கவனியுங்கள்! இல்லையெனில் இது போன்று மோசமான் நிலை
ஏற்பட்டு இரு வீட்டிலும் அவமானமும், இரு சமுகத்திற்கு இடையில் பிரச்சனையும்
ஏற்படும் என்பதை முஸ்லிமல்லாத இளைஞனின் பெற்றோருக்கு எடுத்து சொல்லி,
அவர்களிடத்தில் இனி எந்த விதத்திலும் இந்த பெண்ணின் வாழ்க்கையில் தலையிட
மாட்டேன் என்று எழுதி வாங்கப்பட்டது.
அந்த
முஸ்லிம் பெற்றோருக்கு இஸ்லாமிய அடிப்படையில் அறிவுரை கூறிய மாநில
செயலாளர் காஜா கரிமுல்லாஹ் உங்கள் மகளோடு தோழமையாக் நடந்து
கொள்ளுங்கள்! இல்லை எனில் யார் தோழமையோடு நடக்கிறாரோ அவர்கள் தோளில்
சாய்ந்து விடும் பருவம் இது! அதிலும் வேலைக்கு அனுப்பும் போது இன்னும்
கூடுதல் கவனம் தேவை என எடுத்து சொல்லிய போது அவர்கள் கண்ணீர் விட்டனர்.
எங்களுக்கு வருமானம் தேவையில்லை மானம் தான் முக்கியம் எங்கள் பெண்ணை
மதரசாவுக்கு அனுப்பி படிக்க வையுங்கள்! என்றனர்! அந்தப் பெண்ணும் இனி மேல்
இந்த மாதிரி நடக்க மாட்டேன்! என உறுதி கூறியதை அடுத்து இருவரும்
பெற்றோருடன் அனுப்பி வைக்கப் பட்டனர்.
நள்ளிரவில்
நடந்த இந்த பிரச்சனையால் திருவல்லிக்கேணி மர்கஸ் இருந்த அந்த பகுதியில்
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது! பள்ளிவாசலில் நடந்த இந்த பேச்சு
வார்த்தையில் அந்த முஸ்லிமல்லாத இளைஞனின் சார்பில் வந்த அனைவரும் இந்திய
தவ்ஹீத் ஜமாத்தின் இந்த அணுகு முறையை பாராட்டியதோடு 'இனி ஒரு முறை நாம் இது
போல சந்திக்க கூடாது' எனக் கூறியது குறிப்படத் தக்கது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தடுத்த இது போன்ற ஏராளமான செய்திகள்!
பார்க்க கீழ்க்காணும் லிங்க்குகளை கிளிக் செய்யவும்.
- http://www.onlinesengiskhan.com/2012/03/intj_6286.html
- http://www.onlinesengiskhan.com/2012/02/intj_21.html
- http://www.onlinesengiskhan.com/2012/02/blog-post_19.html
- http://www.onlinesengiskhan.com/2012/02/intj_14.html
- http://www.onlinesengiskhan.com/2012/02/blog-post_07.html
- http://www.blogger.com/post-edit.g?blogID=3860101667950031853&postID=9158589199379295440
- http://www.onlinesengiskhan.com/2011/03/blog-post_07.html
- http://www.onlinesengiskhan.com/2011/03/blog-post_319.html