திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, August 4, 2012

பிரான்ஸில் பள்ளிவாசலுக்கு முன் பன்றித் தலைகள்

,

பிரான்ஸில் பள்ளிவாசல் வாயிலில் இரு பன்றித் தலைகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பிரான்ஸில் வளர்ந்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு செயல்களில் ஒன்று என அந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரான்ஸின் மொன் டவ்பானில் உள்ள சலாம் பள்ளி வாசலின் முன் வாயில் கதவில் நேற்று முன்தினம் இரு பன்றித் தலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
அவைகளில் இருந்து வலியும் ரத்தம் பள்ளிவாசல் வாயில் எங்கும் பரவி இருந்தது. நேற்று முன்தினம் சுபஹ் தொழுகைக்கு முன்னர் இந்த பன்றித் தலைகள் போடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. நோன்பு காலத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத் தக்கது என்று மேற்படி பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி மொஹமட் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனுவல் வல்ஸ், உடன் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார்.
ஏற்கனவே வடக்கு பரிஸின் புறநகர் பகுதியான கனவில்லா நகர கவுன்ஸிலின் 4 முஸ்லிம் தொழிலாளர்கள் நோன்பு பிடித்ததற்காக பணியில் இருந்து இடை நீக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ஆம் ஆண்டிலும் இதேபோன்று பிரான்ஸில் பள்ளி வாசலொன்றுக்கு முன் பன்றி கால்கள் போடப்பட்டிருந்ததோடு அங்கு இனவாத வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
பிரான்ஸில் சுமார் 40 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஐரோப் பாவிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு பிரான்ஸ் ஆகும்.
எனினும் இங்கு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹலால் முறையில் மிருகங்களை அறுப்பதற்கு தடை விதிப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.
 
தகவல் ரிஃபாஸ் நூருதீன்.

0 comments to “பிரான்ஸில் பள்ளிவாசலுக்கு முன் பன்றித் தலைகள்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates