சேப்பாக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 'தொப்புள் கொடி உறவுகளுக்கு ரமதான் விருந்து' எனும் தலைப்பில் லாக் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு 'பெருகி வரும் அனாச்சரங்கள்' எனும் தலைப்பில் மாநிலப் பேச்சாளர் அப்துல் ஹமீது, மது, ஆபாசம் போன்ற அனாச்சாரங்களை சாடியதோடு உங்களை விட மோசமான அனச்சரங்களில் மூழ்கிக் கிடந்த எங்கள் அப்பன் பாட்டன் இதில் இறந்து விடுபட இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தனர் என அழைப்பு விடுத்தார்.
அடுத்து 'பண்டிகைகளும் நோக்கங்களும்' எனும் தலைப்பில் பேசிய மாநில செயலாளர் முஹம்மது முஹய்யிதீன் இஸ்லாமிய பண்டிககளினால் மனித குலம் பெரும் நண்மையையும், மற்ற பண்டிகைகளினால் ஏற்படும் பொருள் விரயம், சுற்று சூழல் மாசு, பிறருக்கு ஏற்படும் துன்பம் போன்றவற்றை ஒப்பிட்டு பேசி இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்.
அடுத்து நோன்பின் மாண்புகள் எனும் தலைப்பில் பேசிய மாநிலப் போது செயலாளர் செங்கிஸ்கான் ஏழைகளின் பசியை உணர்வதற்காகத்தான் நோன்பு எனில் அதை பணக்காரகளுக்க்கு மட்டும் இறைவன் கடமை ஆக்கியிருப்பான் பசியிலே வாடிய நபிகளாரின் சமுதாயத்திற்கு கடமை ஆக்கியிருக்கமாட்டான்.
எந்நேரமும் இறைவன் நம்மை கண்காணிக்கிறான் எனும் இறை அச்சம் மட்டுமே நோன்பின் தத்துவம் என்பதை விளக்கி இறை அச்சம் பெற்று இனிய சமுதாயம் படைக்க அழைப்பு விடுத்தார்.
இறுதியில் தலைவர் S.M.பாக்கர், துணைத் தலைவர் முனீர், மாநிலச் செயலாளர் காஜா கரிமுல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், கலீல் சிக்கந்தர், நசிர் உள்ளிட்ட தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள், இப்ராகிம், முஸ்தாக், ஜலால் உள்ளிட்ட திருவல்லிக்கேணி நிர்வாகிகள், யூசுப் அமின் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள், ஆகியோர் தொப்புள் கொடி உறவுகளுக்கு திருமறை தமிழாக்கத்தையும், 50 க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு இலவச ஸ்கூல் பேக்குகளையும் வழங்கினார்.
இது வரை யாரும் எங்களுக்கு நோன்பு கஞ்சி தந்ததில்லை எனக் கூறிய அம்மக்கள் ரமலான் விருந்தும் அது குறித்த விளக்கமும் தந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தை பாராட்டியதோடு,குடிநீர் மற்றும் சாக்கடை உள்ளிட்ட தங்கள் பகுதி குறைபாடுகளை செய்திகளும் நிஜங்களில் சுட்டிக் காட்டுமாறு எஸ்.எம்.பாக்கர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அலஹம்து லில்லாஹ்.