தஞ்சை
வடக்கு மாவட்டம் நாச்சியார் கோயில் திருநறையூர் பகுதிகளில் பல மனுக்கள்
கொடுத்தும் கடந்த 5 ஆண்டுகளாக புதிய ரேசன் கார்டுகள் வழங்கப் படாததை
கண்டித்து 'மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு வரும் மாவட்ட ஆட்சியரின்
கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பேனர் ஒன்றை நாச்சியார் கோயில் கிளை
சார்பில் வைக்கப் பட்டது.
வட்ட
வழங்கல் அதிகாரிகள் இரவோடு இரவாக .அந்த பேனரை அகற்றியுள்ளனர். இதை அறிந்த
ஐ.என்.டி.ஜே கிளை நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும்
நடவடிக்கை எடுக்காததால் இதைக் கண்டித்து கலெக்டர் வரும் நேரத்தில் நாங்கள்
போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
ஐ.என்.டி.ஜே
போராட்ட அறிவிப்பை அறிந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் காவல் துறையினரை அணுகி
பிரச்னையை தீர்க்க வேண்டியதால் DSP சிவா பாஸ்கர் தலைமையில் காவல் துறை பீஸ்
மீட்டிங் ஏற்பாடு செய்தது. இதில் மாநில செயலளர் ஜாபர், மாவட்ட நிர்வாகிகள்
ஒலி முஹம்மத் , நூருல் அமீன் . பிஸ்மி ஜாகிர் கலந்து கொண்டனர்.
பேச்சு
வார்த்தை நடத்தியதில் உங்கள் கோரிக்கையை ஒரு மாதத்தில் சரி செய்கிறோம்
எனக் கூறிய போது 'மாநில செயலாளர் ஜாபர் எழுத்துப் பூர்வமாக உறுதி தந்தால்
போராட்டத்தை வாபஸ் வாங்குவோம்' எனக் கூறியதை அடுத்து காவல் துறை உயர்
அதிகாரிகள் முன்னிலையில் வட்ட வழங்கல் அதிகாரிகள் எழுத்துப் பூர்வ
உறுதியளித்தனர். இதை அடுத்து போராட்டம் வாபஸ் வாங்கப் பட்டது. அல்ஹம்து
லில்லாஹ்.